பாப்புலர் ஃப்ரண்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்
12-பிப்ரவரி-2012
சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக செய்துவரும் சமூக மேம்பாட்டிற்கான பணிகளை ஒவ்வொரு மாதமும் தெரிவிக்கும் வகையில், சென்ற ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக செய்த நலதிட்ட உதவிகளை பட்டியலிடுகிறோம்.
ஜனவரி - 2012 (சமூக மேம்பாட்டு பணிகள் / உதவிகள்)
1. மதுரை: பெரியார் நகர் பள்ளி வாசலுக்கு ரூ. 19,200/- மதிப்பில் ஆழ்குழாய் கிணறு (BORE WELL) போட்டு கொடுக்கப்பட்டது. மேலும் ரூபாய் 4622/- க்கு கல்வி உதவியும், அனாதையான ஜனாஸா ஒன்றும் அடக்கம் செய்யப்பட்டது.
2. கோவை: வடக்கு மேட்டுப்பாளையம் புளியம்பட்டி பள்ளிவாசலுக்கு கட்டுமானப் பணிக்காக ரூபாய் 22,000 க்கு மணல் வாங்கி கொடுக்கப்பட்டது.
3. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்கும், தஞ்சை தெற்கு நெல்லடிக்கொல்லை பள்ளிவாசலுக்கும் சந்தூக் வாங்கி கொடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 29,768/-.
4. திருப்பூர்: வடுகன்காளிப்பாளையத்தில் 250 அடி நீளத்திற்கு சாலை அமைத்து தரப்பட்டதுடன் சாலையின் இரண்டு பக்கமும் கழிவு நீர் செல்வதற்காக வாய்கால் போன்று கட்டி தரப்பட்டது.
5. நெல்லை: பெண்களுக்காக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 270 பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் விபத்து மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 23,500 வழங்கப்பட்டது. வியாபாரம் செய்ய உதவியாக ரூபாய் 8400/- மற்றும் ஜனாஸா அடக்கம் செய்ய ரூபாய் 3500/-ம் வழங்கப்பட்டது.
6. கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மருத்துவ உதவியாக ரூபாய் 32,450 /- ம், திட்டுவிளையில் இறந்து போன ஒருவரின் குடும்ப செலவிற்காக ரூபாய் 5000/-ம், ஏழைப்பெண் ஒருவரின் திருமணத்திற்காக 21,200/- ரூபாயுடன் 1 1/2 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
7. நாகப்பட்டினம்: கல்வி உதவித்தொகையாக ரூபாய் 3000/-ம், ஏழை குடும்பத்திற்காக ரூபாய் 2000/-ம் வழங்கப்பட்டது.
8. தஞ்சை தெற்கு: தீ விபத்தில் பாதிக்கபட்ட 2 வீடுகளுக்கு ரூபாய் 15,000/- நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
9. திருச்சி: NWF சார்பாக ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 3000/- ம், பட்டுப்புடவையும், ரூபாய் 1500/- மதிப்பில் பாத்திரங்களும் வழங்கப்பட்டது.
10. தஞ்சை: திருமணத்திற்கு உதவியாக ரூபாய் 4750/-ம், கல்விக்காக ரூபாய் 2500/-ம் வழங்கப்பட்டது.
11. சென்னை: 6 மாதக்குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 24,500/-ம், வலிப்பு நோயால் அவதிப்பட்டு வரும் ஒரு சிறுவனின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 50/- ம், +2 வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 4500/- வழங்கியதுடன் வெள்ள நிவாரண உதவியாக 3 நபர்களுக்கு தலா ரூபாய் 2000/- வீதம் மொத்தம் ரூபாய் 6000/- வழங்கப்பட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு நமது துறையின் சார்பில் மீன்பாடி வண்டி ஒன்று வழங்கியிருந்தோம். தினமும் 150 முதல் 170 வரை மட்டுமே சம்பாதித்து வந்த அவர் தற்போது நமது உதவிக்குப்பின் 350 முதல் 500 வரை சம்பாதிப்பதாக கூறுகிறார். அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!
கோவை சிறைச்சாலையில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு ரூபாய் 2000/- செலவில் மொஹரம் மாதத்தில் விருந்து கொடுக்கப்பட்டது.
1. திருமண உதவியாக 5 பெண்களுக்கு ரூபாய் 86,000 ரொக்கமும், 16 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
2. ஊனமுற்ற ஒரு நபருக்கு ரூபாய் 1500/- க்கு காலணி வாங்கி கொடுக்கப்பட்டது.
3. கம்யூட்டர் வாங்குவதற்காக ரூபாய் 4,000/-மும், மருத்துவ உதவியாக சுமார் 1,23,000/- ரூபாயும் வழங்கப்பட்டது.
4. கரும்புக்கடையில் வியாபாரம் செய்வதற்காக ரூபாய் 3000/- மற்றும் இரண்டு ஜனாஸாக்கள் அடக்கமும் செய்யப்பட்டதுடன், கோவை ஜி.எம் நகர் மற்றும் கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டது. துப்புறவு தொழிலாளர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
12. வேலூர்: சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை யாக ரூபாய் 30,000/- வழங்கப்பட்டது.
கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 யூனிட்கள் இரத்த தானம் செய்யப்பட்டது.
13. ராமநாதபுரம்: 3 ஏழைகளுக்கு திருமண உதவியாக 1.5 லட்சம், மருத்துவ உதவியாக ரூபாய் 3000/-, கொதகுடியில் வீடு புரணமைப்பதற்காக ரூபாய் 14000/- வழங்கப்பட்டது.
கடந்த மாதம் மட்டும் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக ரூபாய் 6,84,643/- பல்வேறு பணிகளுக்கு செய்துள்ளோம்.
மேலும்....
எகிப்து பாராளுமன்றத்தில் ‘அதான்’ அழைப்பை விடுத்த எம்.பி
09-பிப்ரவரி-2012

கெய்ரோ:எகிப்து பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது எம்.பி ஒருவர் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) கூறியது சர்ச்சையானது. கடந்த செவ்வாய்க்கிழமை அஸர்(மாலைநேர) தொழுகை வேளையில் ஸலஃபி கட்சியான அந்நூரை சார்ந்த எம்.பி மம்தூஹ் இஸ்மாயீல் எழுந்து அதான் கூற துவங்கினார். உடனே சபாநாயகர் ஸஅத் அல் கதாதனி அமைதியாக அமருமாறு கூறினார். ஆனால் இஸ்மாயீல் அதனை பொருட்படுத்தாமல் தனது அதானை பூர்த்தி செய்தார்.
‘நீங்கள் வேண்டுமானால் வெளியே மஸ்ஜிதுக்கு சென்று அதான் கூறி தொழுகை நடத்துங்கள். இது விவாதம் நடைபெறும் இடம்’ என சபாநாயகர் கூறினார். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு வழிகளை தேடலாம் என கூறிய சபாநாயகர் நடப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற கூட்டத்தின்போது எம்.பிக்களுக்கு தொழுகை நஷ்டப்படுவதாகவும், இது குறித்து தீர்வு காணலாம் என கூறிய சபாநாயகர் தனது வாக்குறுதியை பேணவில்லை என்றும் இஸ்மாயீல் குற்றம் சாட்டினார். அதேவேளையில் கால்பந்து விளையாட்டு இஸ்லாத்திற்கு எதிரானது என ஸலஃபி மார்க்க அறிஞர் ஷேக் அப்துல் முனீம் அல் ஷாஹத் ஃபத்வா(மார்க்க தீர்ப்பு) வழங்கினார். பின்னர் அவரது தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து தனது தீர்ப்பை திருத்தி வெளியிட்டார். வர்த்தகம் அடிப்படையிலான கால்பந்து விளையாட்டை இஸ்லாம் தடுத்துள்ளது என அவர் விளக்கம் அளித்தார்.
கடந்த வாரம் எகிப்தில் கால்பந்து போட்டி நடக்கும் போது ஏற்பட்ட கலவரத்தில் 74 பேர் மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஷேக் அப்துல் முனீம் இந்த ஃபத்வாவை வழங்கினார்.
மேலும்....
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்துரையாடல்
08-பிப்ரவரி-2012

மேலும்....
சங்கரன் கோவில்: கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! முஸ்லிம்- தலித் ஒற்றுமையை பலப்படுத்த இரு தரப்பு தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் வேண்டுகோள்!
08-பிப்ரவரி-2012
நெல்லை மாவட்டத்தில் (மேற்கு) சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நட்புணர்வோடும், சுமூகமாகவும் வாழ்ந்து வரும் இவர்கள் மத்தியில் பகையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சில சமூக விரோத விஷமிகள் சமீபகாலமாக பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று (7.02.2012) தலித்கள் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் ஊர்வலம் கழுகுமலை ரோடு பள்ளிவாசல் அருகே வரும்போது ஊர்வலத்தில் இருந்த விஷமிகள் சிலர் பள்ளிவாசலின் உள்ளே செருப்புகளை வீசியும், வெடிகளை வெடித்தும் பிரச்சனை செய்து விட்டு சென்றுள்ளனர். இதனைப் பார்த்த முஸ்லிம்கள் காவல் துறையினரிடம் புகõர் கொடுத்துள்ளனர். பிரச்சனையின் தீவிரத்தை உணராத காவல் துறையினரோ சில காவலர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
பின்னர் மீண்டும் அந்த பகுதிக்கு ஊர்வலத்தினர் வரும்போது பிரச்சனை செய்துள்ளனர். அதனை தடுக்க வந்த காவல் துறையினரையும் தாக்கிவிட்டு பிரச்சனையை தொடரவே இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் கலவரமாக மாறி இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் கூடி தாக்குதலில் ஈடுபட்டதோடு கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி ‘தீ’யும் வைத்துள்ளனர்.
சில மணி நேரம் நீடித்த கலவரம் எஸ்.பி. தலைமையிலான போலீஸ் படை வந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பின்பு கட்டுக்குள் வந்துள்ளது. கலவரத்தில் திட்டமிட்டே முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே ஒரு குழு செயல்பட்டுள்ளது தெளிவாகின்றது.
நெல்லை மாவட்டம் மேற்கு பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த பாசிஸ்டுகள் அவ்வப்போது முயன்று வருவதும், கடந்த