கட்டுரைகள்
  • ஷஹீத் ஹஸன்-அல்-பன்னாஹ் – மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை 14-பிப்ரவரி-2012

    Imam Hassan Al Bannah

    நபி(ஸல்) கூறினார்கள்; “அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்” (அபூதாவூத்)

    ஒவ்வொரு  நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் இஸ்லாத்தை புனர்நிர்மாணிக்க ஒருவரை அனுப்பி வைக்கிறான் என்ற நபிமொழியின் அடிப்படையில், 20-வது நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட முஸ்லிம்களை காப்பாற்றவும், மேலும் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் எவராலும் ஒன்றும்  செய்ய முடியாத காலகட்டத்தில் அபூர்வமான, அசாதாரண தகுதிகளுடைய ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்களை அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு அளித்தான்.

    காலம்,வரலாறு, சூழல் உருவாக்கிய மனிதர் அல்ல. எவருடைய முயற்சியாலும் உருவான மனிதரும் அல்ல. அல்லாஹ்வின் விஷேட ஏற்பாட்டின் பெயரில் உதித்த மனிதராகவே நாம் ஹஸனுல் பன்னாஹ்வை காணமுடிகிறது. என இமாம் நத்வி கூறுகிறார்கள்.

    “அல்-இஹ்வானுல் முஸ்லிமூன்”  என்ற இயக்கத்தை தொடங்கி இன்று எகிப்தில் மாபெரும் எழுச்சியை உருவாக்கிய, இவரது பெயரைக் கேட்டாலோ, அவர் தொடங்கிய இயக்கத்தின் பெயரைக் கேட்டாலோ முஸ்லிம் இலட்சியவாதி ஒருவரின் உள்ளம் புத்துணர்ச்சி பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

    பத்து வயதிலேயே ஹஸனுல் பன்னாஹ்விடம் ஒரு சிறந்த மனிதருக்கான அனைத்து தகுதிகளும் இடம் பெற்றிருந்தன. அந்த வயதிலேயே அவர் இரண்டு இயக்கங்களை உருவாக்கினார்.

    ஜம்மியத்துல் அஹ்லாக்குல் அதபிய்யா – நல்லொழுக்கங்களை உருவாக்கும் இயக்கம்.

    ஜம்மியத்துல் மன்னில் முஹர்ரமா – ஹராம்களை தடைசெய்யும் இயக்கம் ஆகியனவாகும்.

    1928-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தை 6 பேரைக் கொண்டு துவக்கிய பொழுது கூட அதனை அவர் இயக்கம் என பன்னாஹ் குறிப்பிடவில்லை. “முஸ்லிம் உம்மத்தின் உடலில் பாய்ச்சப்படுகின்ற ஆத்மா” என்று குறிப்பிட்டார்.

    இஸ்லாத்திற்காக பணிபுரியும் சகோதரர்கள் நாம் என்பதால் ‘அல் இஃவானுல் முஸ்லிமூன்’ என பெயரிடுவதாக பன்னாஹ் கூறினார்.

    இப்படி தன் வாழ்க்கையை முஸ்லிம் சமூகத்திற்காகவும், இஸ்லாத்திற்காகவும் அர்ப்பணித்த  இமாம் ஹசன்-அல்-பன்னா ஒரு முறை மாணவன் ஒருவருக்கு அளித்த அறிவுரை இன்று நம்மில் பலருக்கு நம்மை சரியான வழியில் பயணிக்கவும், நமது ஈமானின் கயிற்றை பற்றி பிடிப்பதற்கு உதவும் என்பதால் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

    இன்றைய கால கட்டத்தில், மாணவர்கள் சிலர் தனது படிப்பை மேலை நாட்டில் தொடரப் போவதாக அறிவித்தால், அவரது தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் என்று பலரும் அறிவுறுத்துவது அவரது இம்மை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக மட்டும் இருக்கும், ஆனால் மாமனிதர் இமாம் ஹஸன்-அல்- பன்னாஹ் 1935-ஆம் ஆண்டு காலப் பகுதியில் மேற்கத்திய தேசம் ஒன்றில் கல்வி கற்க தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு அளித்த நெஞ்சை உருக்கும் உபதேசங்கள் முற்றிலும் மறுமை வாழ்வை நோக்கமாக கொண்டே அமைந்திருந்தன.

    அவர் அந்த கடிதத்தின் மூலம் தனது உபதேசங்களை பின்வருமாறு தெரிவித்தார்:-

    கண்ணியத்துற்குரிய மாணவனே!

    இன்னும் சற்று நேரத்தில் நீங்கள், உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சமூகத்திற்கு மத்தியிலும், உங்களுக்கு பழக்கமில்லாத மனிதர்களுக்கு மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குறிய உதாரணத்தை பார்ப்பார்கள். எனவே நீங்கள் மிகச் சிறந்ததொரு உதாரணமாக திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

    உங்களிடத்தில் பெறுமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அது தான் உங்களது மனைவி. அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்கு பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும் சந்தோஷத்தையும் பெற்றுத் தருவாள்.

    நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்ப்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன்.

    மேலும் உங்களது எல்லா விவகாரங்களையும், செயற்பாடுகளையும், கண்களுக்குப் புலப்படாத, உள்ளங்கள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நல்லுணர்வோடு செயற்படுங்கள். எனவே அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

    அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே இவ்விஷயத்தில் பொடுபோக்காக இருந்துவிட வேண்டாம்.

    உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள். அவற்றை பிறகு செய்யலாம் என்றோ அல்லது காரணங்களை முன் வைத்து அதிக வேலைகளினாலோ பிற்படுத்தாதீர்கள். விட்டு விடாதீர்கள், ஏனெனில் அது இச்சையின் உணர்வுகள் என்று அல்லாஹ் தன் திருமறையில் பின்வாருமாறு கூறுகிறான்.

    ‘மனோ இச்சையை பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்து விடும்.’ (அல் குர்-ஆன் – 38:26)

    அல்லாஹ்வை நெருங்கி செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன. அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்க்கத்திய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையை செய்வது பன்மடங்கு கூலியை பெற்றுத் தரும்.

    உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான காரியங்களை நிறைவேற்றுவதில் செலவு செய்யுங்கள். பர்லான தொழுகைகளையும், சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்யுங்கள்.

    ஒருவன் பிரயாணத்தில் கேட்கப்படும் துஆ பதிலளிக்கப் படக் கூடியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுபடுத்திக் கொள்வதை நீட்டிக் கொள்ளுங்கள், ஏனென்றால்,

    நபி(ஸல்) அவர்கள், உமது நாவு அல்லாஹ்வின் ஞாபகத்தால் நனைந்து கொண்டே இருக்கட்டும் என அலி(ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்து இருந்தார்கள்.

    அல்-குர் ஆனை விளங்கி, ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அது தான் உள்ளங்களுக்கான நோய் நிவராணமாகும். ஒவ்வொரு நாளையும் அல்-குர் ஆனை கொண்டே முடியுங்கள், ஏனெனில் அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.

    மேலை நாட்டிற்கு பயணம் செய்யும் நீங்கள், அங்கே  பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து உள்ளத்தை திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும், மாயைகளையும் காண்பீர்கள். இவைகளெல்லாம் உங்கள் மறுமையை மறக்கடிக்காமல் இருக்கட்டும்.

    இதனை அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றான்.

    (நபியே!) அவர்களில் இருந்து சில பிரிவினருக்கு, உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக் கொண்டு நாம் சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ அதன் பக்கம் உம்முடைய இரு கண்களையும் நீர் திண்ணமாக செலுத்த வேண்டாம். (ஏனெனில், மறுமையில் வழங்கப் பெறும்) உமது ரப்புடைய உணவு (இவ்வுலக வாழ்வில் அவர்கள் வழங்கப் பெறுவதை) விட மிகச் சிறந்ததும், நிலையானதும். (அல் குர்-ஆன் – 20:131)

    எனது மதிப்பிற்குரிய மாணவனே!  மேலை நாட்டில் உள்ளவர்கள் அல்லாஹ் நமக்கு ஹராமாக்கியதை ஹலாலாக கருதுவார்கள். அந்த ஹராமான விஷயங்களை செய்ய சற்றும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே நீங்கள் அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ள வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியில் இருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதரமாக இருக்க மாட்டது.

    மேலும் நீங்கள் அங்கு, இளமை நிறைந்த பெண்களுடன் தோழமை கொள்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் இது ஏனையவர்களுக்கு ஒரு குற்றமாக காணப்பட்டால் உங்கள் மீது இரண்டு குற்றங்களாகும்.  மதுபானத்தை நெருங்காதீர்கள், அவ்வாறு நெருங்குவதற்கு சூழலை காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராமான உணவினால் வளரும் உடம்பு நரகத்திற்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியை தவிர வேற ஒன்றுமில்லை.

    இன்னும் தூய்மானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்களின் மீது ஹராமாக்கி வைப்பார். (அல் குர்-ஆன்  – 7:157)

    இவ்வாறு  இன்னும் பல விஷயங்கள் இருப்பினும், அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் எனப் பயப்படுகிறேன் என்று தனது நெஞ்சுருகும் அறிவுரையை யார் என்று அறியாத, சொந்தமோ பந்தமோ இல்லாத ஒரு மாணவனுக்கு அவர் வழங்கிய அறிவுரை நமது வாழ்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது..

    இப்படிப்பட்ட மாமனிதர் இந்த உலகத்தைவிட்டு மறைந்து 63 வருடங்கள் கழிந்துவிட்டன என்பதை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் சொரிகின்றன. உள்ளங்கள் ஏங்குகின்றன.

    ஆம்! அவர் தன்னுடைய 42 வருட வாழ்வை இஸ்லாதிற்க்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் செலவழித்து, மாபெரும் இயக்கமான “அல்-இஹ்வானுல் முஸ்லிமூன்”  என்ற இயக்கத்தை துவங்கி, மகத்தான எழுச்சியை கண்ட பன்னாஹ் அவர்கள் பிப்ரவரி 12, 1949 ஆண்டு  இதே நாளில் மன்னர் ஃபாரூக்கின் சூழ்ச்சியால் எதிரிகளால் சுட்டு  வீழ்த்தப்பட்டு ஷஹீத் என்ற அந்தஸ்தை அடைந்து இறைவனிடத்தில் சேர்ந்தார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிவூன்).

    20-ஆம் நூற்றாண்டில் அற்புதமான மனிதர்களை இந்த உலகம் காண வித்திட்ட ஹஸனுல் பன்னாஹ்வின் வாழ்க்கையை நமது இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். முழுமையான இஸ்லாமிய ஆளுமையை தோற்றுவிக்கும் விதமாக ஹஸனுல் பன்னாஹ்வின் தர்பியா(ஒழுக்க பயிற்சி) அமைந்திருந்தது. ஆன்மீகம், அறிவு, பண்பாட்டு, சமூக விவகாரங்கள், அரசியல், இறை வழி போராட்டம், உடல் பலம் என அனைத்து துறைகளையும் தழுவியதுதான் பன்னாஹ்வின் பயிற்சியாகும்.

    இஸ்லாமிய இலட்சியவாதிகளை குறித்து படிக்க முயலும் வேளையில் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்களின் ஆளுமை, அணுகுமுறைகள் மறக்காமல் படிக்கப்பட வேண்டும்.

  • மேலும்....

  • கூடங்குளம்: அணு உ(கொ)லைத்திட்டம் உயிர்காக்க வேண்டி நடக்கும் உண்ணாவிரதம் - பகுதி-II 14-பிப்ரவரி-2012

    தமிழகத்தின் மின்தேவை ஓர் பார்வை!

    தேசத்தின்வளர்ச்சியை மொத்த குத்தகைக்கு எடுத்துள்ள மன்மோகன்சிங் கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லையெனில் தமிழகம் தொழிற்துறையில் பின்தங்கிவிடும் என வளர்ச்சியினை காரணம் காட்டி அன்பான தொனியில் எச்சரிக்கை விடுக்கின்றார். அவரின் இந்த மந்திர சொல்லுக்கு வலு சேர்க்கும் வண்ணம் அணு உலைக்கு ஆதரவு என்ற பெயரில் தமிழக நலனிற்கு எதிராக வீரவசனம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் காங்கிரஸ்காரர்கள்.

    தமிழகத்தை எல்லா விஷயங்களிலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திடும் காங்கிரசின் தேசிய தலைமை கூறுவது போன்று கூடங்குளம் திட்டம் கைக்கூடி வரவில்லை என்றால் மட்டும் தமிழகம் இருளில் மூழ்கி விடப்போவதில்லை. மாறாக மத்திய, மாநில அரசுகளின் தெளிவான திட்டமிடலும், சரியான நிர்வாக திறமையும் இருந்தாலே போதும் தமிழகம் தொழிற்துறையில் தொடர்ந்து முன்னேறுவதற்கு வாய்ப்பாக அமையும். தமிழகத்தை அணு உலை மூலம் ஆபத்தான களமாக மாற்றத் துடிக்கும் தமிழக காங்கிரஸ்காரர்கள் மற்ற மாநிலங்களை போல மத்திய மின் பகிர்மானத்திலிருந்து கூடுதலாக மின்சாரத்தை தமிழகத்திற்கு பெற்றுத்தர குரல் எழுப்பினாலே போதும் தமிழகம் தொய்வில்லாமல் முன்னேறிவிடும் என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

    தற்பொழுது தமிழகத்தின் மின் தேவை 10,00012,000 மெகாவாட் இருக்கையில் மின் பற்றாக்குறை 20002500 மெகாவாட் என்கிறது ஒர் புள்ளி விபரம். மின்பற்றாக்குறை வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகம் தொழிற்துறையில் மிகவேகமாக முன்னேறி வருவதாகவும், நகரமயமாகி வருவதாகவும், மக்களின் வாழ்க்கைத்தரம் கூடிவிட்டதாகவும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து விட்டதாகவும் காரணம் காட்டி மின்பற்றாக்குறையை தவிர்க்க வெளிச்சந்தையிலிருந்து கூடுதல் விலை மின்சாரம் வாங்கப்படுவதால் மின்சார வாரியம் நஷ்டத்தில் தள்ளப்படுவதாக கூறுகின்றார். எனவே நஷ்டத்தை தவிர்க்க மின்சாரத்தின் விலையை கூட்ட வேண்டும். மின் உற்பத்தியினை அதிகரிக்க கூடங்குளம் போன்ற பல்வேறு அணு உலைகள் தமிழகத்திற்கும் அவசியம் என்பன போன்ற பல்வேறு பரப்புரைகள் பரப்பப்படுகின்றது.

    மேற்சொன்ன கூற்றுக்கள் ஒரளவுக்கு உண்மை என்றாலும், பன்னாட்டு, உள்நாட்டு பெரும் நிறுவனங்களின் அரசியல், பொருளாதார கொள்ளை இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இரகசிய காரணங்களையும் இவை உள்ளடக்கியது.

    உலகமயமாக்கல் தமிழகத்தை தொழிற்துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளது என இருபெரும் திராவிட கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு பெருமையடிக்கின்றன. ஆனால், அவை எவ்வாறு தமிழக மற்றும் உள்நாட்டு தொழில்களையும் தொழிலாளர்களையும் அந்நிய நிறுவனங்களிடம் அடகு வைத்துள்ளன என்பதை வசதியாக மறைத்து விடுகின்றன.

    சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் மலிவு விலையில் பொருள்களை உற்பத்தி செய்து, வரியேதும் செலுத்தாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் பெரும் வியாபாரிகளுக்கும், அந்நிய நாடுகளுக்குஅவுட்ஸோர்ஸிங்என்ற பெயரில் அடிமை சேவகம் செய்யும் .டி. கம்பெனிகளுக்கும் மின்வெட்டு இல்லாது மின்சாரம் வழங்கும் அரசு விவசாயிகள், நூற்பாலைகள், அச்சகம் போன்ற சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு மட்டும் தொடர் மின்வெட்டை நடைமுறைப்படுத்தி வருவதால் வேலை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    பருவ மழை பெய்யவில்லை, போதிய காற்று வீசவில்லை, நிலக்கரி வரத்து இல்லை என பல இல்லைகளை கூறும் தமிழக ஆட்சியாளர்கள் தமிழகம் சீரான பருவ மழையை பெறும் மாநிலமில்லை என்பதை உணர்ந்தே உள்ளனர். 1957 முதல் 1990 ஆம் ஆண்டு வரை சீராக இருந்த மின் உற்பத்தியும், கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக இருந்த தமிழகத்தின் நிலைமையும் தாராளமயக் கொள்கை புகுத்தப்பட்ட பின்னர் நிலைமை தலைகீழாக மாறிப்போனது.

    1997 ஆம் ஆண்டு 6,000 மெகாவாட்டாக இருந்த மின்தேவை இன்று 12,000 மெகாவாட்டாக உள்ள நிலையில், மாநிலத்தின் மின் தேவை 19,600 மெகாவாட்டாக இருக்கும் என முன்பே கணித்திருந்தது  தமிழ்நாடு மின்சாரம் வாரியம். இதில் உண்மை என்னவெனில் 1993 ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் புதிய காற்றாலைகள் அமைக்கப்படாததும், 1996 ம் ஆண்டிற்கு பிறகு புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படாததும், 1998 ம் ஆண்டிற்கு பிறகு புதிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படாததில் இருந்தே தமிழக அரசு மின் உற்பத்தியை அதிகரிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது என்பதை நாம் அறிகிறோம்.

    கடந்த 5 ஆண்டு திட்டத்தில் 1000 கோடியாக இருந்த மின் உற்பத்தி மேம்பாட்டு நிதியை 800 கோடியாக குறைத்துவிட்டது தமிழக அரசு. இவ்வாறு தமது பல்வேறு கடமைகளிலிருந்து தமிழக அரசு விலகியதால் தான் 199293 ல் 2600 கோடியை இலாபமாக ஈட்டிய தமிழக மின்சார வாரியம் இன்று நஷ்டத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மின்சார வாரியம் தனது வருமானத்தில் சுமார் 50% தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்காகவே செலவு செய்யக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. மேலும் இருபெரும் திராவிட கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும், மிக்சியும், கிரைண்டரையும் இலவசமாக மக்களுக்கு வழங்கியதன் விளைவு தான் அனாவசிய மின்நுகர்வுக்கு மற்றொரு காரணம் என்கின்றனர் மின்வழங்கல் துறை வல்லுனர்கள்.

    கிராமப்புறங்களில் மக்கள் பேச்சு நடையில் கூறுவார்கள்சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டதை போன்றுஎன்று அது போலவே இலவசங்களை மக்களுக்கு வாரி வழங்கி மின் தேவையை அதிகரிக்க செய்த ஆட்சியார்கள், வரிச்சலுகை, மானியம் வழங்கி கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து அவர்களின் மூலம் மின் நுகர்வை உயர்த்திய ஆட்சியாளர்கள், மின்துறையில் தனியாரை தாராளமாக அனுமதித்து அவர்களின் கொள்ளை இலாப நடவடிக்கைகளுக்கு துணைபோன ஆட்சியாளர்கள் தான் இன்று மின்சார விலையை உயர்த்தப் போவதாக மக்களை மிரட்டிக் கொண்டுள்ளனர்.

    எரிகின்ற கொள்ளியை உருவினாலே தீ தானாக அணைந்து விடும்என்பதைப் போன்று அழிவுத்திட்டமான அணுஉலை திட்டத்திற்கு எதிராக மக்கள் அலை அலையாய் அணி திரளும் வேளையில் அப்பிரச்சனையை திசை திருப்பும் வண்ணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை குறிப்பாக மின்சார விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மின்சார விலையுயர்வை கட்டுப்படுத்த மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தற்சமயம் அதற்கு ஒரே தீர்வு கூடங்குளம் மட்டுமே என்ற மாயையை பத்திரிகைகளின் உதவியுடன் மக்கள் மனதில் திணிக்க தமிழக அரசு முயல்வதாக மக்களில் ஒரு சாரார் கருதுகின்றனர்.

    கூடங்குளம் அணு உலையானாலும், அரசு உயர்த்திடும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வானாலும் இவை அனைத்துமே உலகமயமாக்கலின் பக்க விளைவுகளே. மக்கள் போராட தயாராகாத வரையில் அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை தடுக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு, நமது சந்ததியினரை காப்பதற்கு அணி திரள்வோம். அத்துமீறல்களை தட்டிக் கேட்போம். தனியார் தாராளமயமாக்கல் கொள்(ளை) கைகளை விரட்டியடிப்போம்.

    நீயா? நானா? மக்களை அழிக்க மன்மோகன் அரசு தயார்!

    ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக உலகமயமாக்கல்லை இந்தியாவில் புகுத்தியும், பல இலட்சம் விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியும், அதன் மூலம் பல லட்சம் குடும்பங்களை வீதிக்கு கொண்டு வந்தும் தனியார்மயமாக்கலின் தாகத்தினை தணிக்க முடியவில்லை என எண்ணிய மன்மோகன் அரசு அனைத்து துறைகளிலும் அந்நிய நிறுவனங்களை அனுமதித்து அழகு பார்த்து கொண்டிருக்கின்றது.

    கொள்ளை இலாபத்தை மட்டுமே கொள்கையாக கொண்டுள்ள பராசூர பன்னாட்டு நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்களை விழுங்கும் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுள்ளன இன்றைய காங்கிரஸ், நேற்றைய பா.., கம்யூனிஸ்ட் காலனித்துவ அடிவருடி அரசுகள். அந்த வரிசையில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் வாரி சுருட்டி விழுங்கி செல்பவைதான் அணுசக்தி ஒப்பந்தங்கள்.

    ஜெயம் பெறுமா ஜெய்தாபூர் திட்டம்?

    அணு சக்தி ஒப்பந்தங்களில் மிகப்பெரியதுதான் அண்மையில் 2010, டிசம்பர் 6 அன்று பாரத பிரதமர் மன்மோகன் பிரஞ்சு அதிபர் சர்கோசி இடையே கையெழுத்தான ஜெய்தாபூர் அணு உலை ஒப்பந்தம். இவ்வொப்பந்தப்படி 9900 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்தி மூலம் உற்பத்தி செய்ய மஹாராஷ்டிரா மாநில இரத்தினகிரி மாவட்டம் மத்பான் என்னும் கிராமத்தில் 1650 மெகாவாட் திறனுள்ள 6 அணு உலைகள் அமைக்கப்படும். (கூடங்குளத்தை காட்டிலும் கூடுதலாக தலா 650 மெகாவாட் உற்பத்தி செய்பவை). ரஷ்யாபிரான்ஸ்ஜெர்மனி நிறுவனங்களிடையேயான வணிகப்போட்டியால் கூடங்குளத்தின் உற்பத்தியும் அதிகரிக்கப்படலாம். கூடங்குளம் 1,2 என நின்றுவிடாமல் 3,4,5,6 என நீளலாம் என்பதே அண்மையில் வெளியான ரஷ்ய தூதரின் அறிவிப்பும் சிம்பாளிக்காக எடுத்து கூறுகின்றது.

    ஜெய்தாபூரில் அமையவுள்ள அணு உலை 1.12 இலட்சம் கோடி மதிப்பிலானது என திட்ட அறிக்கை கூறுகின்றது. அது  2 இலட்சம் கோடியில் முடியுமா 3 இலட்சம் கோடியி முடியுமா? என்பது திட்டம் முடிவடையும் பொழுதுதான் முழுமையாக தெரியும். ஜெய்தாபூர் (9960) மெகாவாட் திட்டம் என்பது அப்பகுதியில் ஒரு துவக்கம் தான். மொத்தம் 33,000 மெகாவாட் அணு மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது அரசு.

    ஜெய்தாபூர் திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் அவசர கதியில் மக்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியது. 2355 நில உரிமையாளர்களில் வெறும் 33 பேர் மட்டுமே நிலத்தை தர சம்மத்தித்து அரசிடமிருந்து காசோலையை 2010 நவம்பரில் பெற்றுக் கொண்டனர். மக்கள் அணுஉலை குறித்து அச்சம் தெரிவித்த வேளையிலேயே தான் அந்நிய நிறுவனமான அரிவா (அகீஉஙஅ) வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அணு உலையை எதிர்த்து 2010 டிசம்பர் 4 ல் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானோர் அடித்து விரட்டப்பட்டனர். மீண்டும் 2011 ஏப்ரல் 18 ல் நடந்த மற்றொரு எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையால் ஒருவர் கொல்லப்பட்டார். 8 பேர் காயமடைந்தனர். 2011 மார்ச் 16 அன்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஜெய்தாபூர் அணு உலை பாதுகாப்புக்கு நான் பொறுப்பில்லை என்று நழுவிக்கொண்டார்.

    கூடங்குளத்திற்கு ஆதரவாக பேசிய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மார்ச் 9 ல் தான் ஜப்பான் விபத்திலிருந்து நாம் பாடம் பெற வேண்டுமென்றும், திட்டமிட்டுள்ள அனைத்து அணு உலை திட்டங்களையும் மீளாய்வு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். ஜெய்தாபூர் அணுஉலை திட்டத்தை கம்யூனிஷ்டுகள் எதிர்க்கின்றனர். இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் ஜெய்தாபூரின் அணு உலை பனி ஜரூராக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

    நாட்டின் மின் தேவை என்ற ஒன்றை கூறியே இவை போன்ற ஆபத்துகளை விலைக்கு வாங்குகின்றனர் நம்  ஆட்சியாளர்கள்.

    கைகழுவப்பட்ட ஹரிப்பூர் மக்களுடன் நின்று காட்டிய அணு உலை திட்டம்

    மக்கள் மனதில் உறுதி, மாநில அரசின் உண்மை, மத்திய அரசுக்கு மாநிலத்தின் மீது அக்கறை இருந்தால் மக்கள் நலனிற்கு எதிரான எதனையும் மாற்ற முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் தான் மேற்கு வங்க மாநிலம் ஹரிப்பூர் அணுஉலை திட்டம் ரத்து செய்யப்பட்ட நிகழ்வு. தமிழ்நாட்டை காட்டிலும் 1.1 கோடி கூடுதல் மக்கள் தொகை கொண்ட, கம்யூனிஸ்டுகளின் இருண்ட ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று, முன்னேற துடிக்கும் மாநிலமான மேற்கு வங்கத்தின் தற்போதைய மின்தேவை 6500 மெகாவாட் ஆகும் மின்பற்றாக்குறை 1000 மெகா வாட் ஆகும்.

    கூடங்குளம் திட்டத்தினை செயல்படுத்தும் அதே ரஷ்ய நிறுவனமானரஷ்அடாம்மூலம் ஹரிப்பூர் அணு உலை திட்டம் செயல்படுத்தப்பட்டால் அம்மாநிலத்திற்கு கூடுதலாக 6000 மெகாவாட் (கூடங்குளம் 1 போன்று 6 மடங்கு) மின்சாரம் கிடைக்கும். இது மாநிலத்தின் மொத்த மின் தேவையை காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும். மக்கள் நலனில் அக்கறையுள்ள மம்தா பானர்ஜி அரசு 2011 ஆகஸ்ட் 17 அன்று மாநில சட்டமன்றத்தில்மேற்கு வங்கத்தின் எப்பகுதியிலும் அணு உலை அமைக்க அனுமதி அளிக்கப்போவதில்லைஎன ஒற்றை வரியில் உரக்க கூறினார்.

    மாநில அரசு பசப்பு வார்த்தை கூறவில்லை. மக்கள் போராட்டத்தினை திசை திருப்பவில்லை. மத்திய அரசில் மன்மோகனுக்கு அடுத்துளள பவர்புல் மந்திரியான பிரணாப்பும் அணுஉலைக்கு வக்காலத்து வாங்க வாய் திறக்கவில்லை. ஏன்? மன்மோகன்சிங் கூட நாராயண சாமிகளை கொண்டு மக்களை மிரட்ட தேச பாதுகாப்பு சட்ட மிரட்டல் தூதுவர்களையும் அனுப்பவில்லை. ஏனெனில் மக்களின் தீவிர எதிர்ப்பு, மாநில அரசு நிபந்தனையற்ற திறந்த தெளிவான ஆதரவேயாகும்.

    மேற்கு வங்கத்தில் அணுஉலை அமைக்க (ரஷ்யா)வுக்கு துணை நின்ற கம்யூனிஸ்டுகள், மஹாராஷ்டிராவில் (பிரான்ஸ்) அணுஉலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் வாய் திறக்காதது ஏன்? தமிழகம் தானே என்பதாலா? அல்லது அணு உலை அமைப்பது அவர்களின் கொள்கை வழிகாட்டியான ரஷ்யா என்பதாலா? இது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

    அணு உலை விபத்து நஷ்ட ஈடு கூடங்குளத்திற்கு உண்டா? இல்லையா? என்பது தெளிவாக இல்லை. ஆனால், கூடங்குளம் பாதுகாப்பானது என வக்காலத்து வாங்குபவர்பகள் கூடங்குளத்தை எதிர்ப்பவர்களினை தேச விரோதிகளாக சித்தரிப்பவர்கள் யார்?

    தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பகல் கனவு கண்டு புழுங்கி கொண்டிருக்கும் தமிழக நலன் விரோத தேசியகட்சிகளான காங்கிரஸ், பா.., கம்யூனிஸ்டுகளுக்கு நன்றாகவே தெரியும். இது வெறும் பகல் கனவே என்று. அதனால் தான் இவர்கள் தமிழக நலனிற்கு தேவையான எதனையும் இம்மண்ணில் அனுமதிப்பதில்லை. தேச நலன் பேச வேண்டிய இடத்தில் (சேது சமுத்திர திட்டம்) மதவாதத்தையும், மக்கள் நலன் காக்க வேண்டிய இடத்தில் தேச வளர்ச்சி என்றும் தானும் தெளிவில்லாது, மக்களையும் தெளிவடைய விடாமல் திட்டமிட்டு குழப்பி கொண்டிருக்கின்றார்கள். மன்மோகன் சிங் அரசுக்கு கூடங்குளம் திட்டத்தை கைவிடுவது என்பதோ, அதனால் அங்கு செய்துள்ள சில ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு (ஊழலை விட பெரிதொன்றுமில்லை) என்பதோ பிரச்சினை இல்லை.

    மாறாக, ஒபாமா துவங்கி கடந்த ஆண்டு வரிசை கட்டி படை பரிவாரங்களுடன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பல்வேறு பன்னாட்டு தலைவர்கள் மேற்கொண்ட பல இலட்சம் கோடி அணு உலை ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு மீண்டும் தலை தூக்கி விடலாம். அதனால் உள்நாட்டில் விலை போகாத அணுஉலைகள் விற்க வேறு இடம் தேடும் நிலை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வந்துவிடுமோ என்ற அவர்களின் வியாபார நலன் பற்றிய கவலையே அன்றி வேறில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

  • மேலும்....

  • கூடங்குளம்: அணு உ(கொ)லைத்திட்டம் உயிர்காக்க வேண்டி நடக்கும் உண்ணாவிரதம் - பகுதி- I 13-பிப்ரவரி-2012

    இந்தியாவில்தூய்மையான, பாதுகாப்பான, பொருளாதார ரீதியில் பயனளிக்கக்கூடிய மின்சக்தி தேவையை நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு, நீர், மின்சாரம் போன்றவற்றால் ஈடு செய்ய முடியாது. ஆகவே எதிர்கால இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு அணு மின்சாரம் அவசியம்என்கின்றார் நமது பிரதமரும் பொருளாதார மாமேதையுமான மன்மோகன் சிங். அவரின் கருத்துக்கு அப்துல் கலாம் உட்பட பல்வேறு அணுசக்தி விஞ்ஞானிகளும், அரசியல் தலைவர்களும், தம்மை அறிவுஜீவிகள் என பறைசாற்றிக் கொள்பவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இவர்கள் எல்லோரையும் மிகைக்கும் வண்ணம், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நவீன 3 வது தலைமுறை தொழில்நுட்பம் தானாக செயல்படும் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டது என்றும், இயற்கை பேரழிவு ஏற்பட்டு அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டால் உடனடியாக அணுஉலை குளிர்விக்கப்பட்டு கதிர்வீச்சு வெளியேறாமல் தடுக்கப்படும் என்றும், மின்சாரம் தடைபட்டாலும் தொடர்ந்து இயக்க 6 மெகாவாட் (Mஙி) திறனுள்ள டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாலும், இது கூடுதல் பாதுகாப்பானது என்கின்றார் சர்ச்சைக்குரிய கூடங்குளம் அணுமின் நிலையத்தின்  இயக்குனர் காசிநாத் பாலாஜி.

    கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம் சுனாமியால் பாதிப்படைவதற்கு முன்புவரைபுகுஷிமா அணு உலையில் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாக உள்ளது என்றனர் இவ்வணுமின் நிலைய அதிகாரிகள். ஆனால் விபத்துக்கு பின் அதன் விளைவுகளை நாம் அனைவரும் அறிவோம்.

    இதையே 1979ம் ஆண்டு அமெரிக்காவின் 3 மைல் தீவு அணு உலையில் ஏற்பட்ட பெரும் விபத்தின் மூலம் பாடம் கற்றுக்கொண்டோம், எனவே இனி ஒருபொழுதும் இது போன்று விபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்று மார்தட்டினர் அணுசக்தி நிபுணர்கள். ஆனால் ஏழே ஆண்டுகளில் 1986ல் உலகையே உலுக்கியசெர்நோபாஅணு உலை விபத்து ரஷ்யாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளில் சிறிய அளவில் பல நூறு விபத்துகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலான விபத்துகள் இறுதி கட்டத்தில் தான் தடுக்கப்பட்டுள்ளது. இவை சிறிய அளவில் நடைபெற்றுள்ளதால் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை. மேலும் உலகில் அணு உலைகள் அமைக்கப்பட்டு 55 ஆண்டுகளே நிறைவடைந்த நிலையில் சுமார் 961 விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாக பன்னாட்டு அணுசக்தி கழகம் அறிவித்துள்ளது.

    உலகில் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் 8 நாடுகளில்தான் 70% (303/432) அணுமின் நிலையங்கள் உள்ளன. அதனால் பல நாடுகள் பாதிப்படைந்து, பாடம் கற்று அணுமின் திட்டங்களை கைகழுவி வருகின்றன. அமெரிக்காவை ஆசானாக, ஆத்ம நண்பனாக, ஆக்கிரமிப்பு யுத்தங்களில் அமெரிக்காவை அடியொற்றி பின்பற்றும் 27 நாடுகளில் தான் 387 அணுஉலைகள் (உலகின் 90% அணுஉலைகள்) உள்ளன என்றும் அவற்றில் பல நாடுகள் (ஜெர்மனி உட்பட ஐரோப்பிய யூனியன்) இன்று திவாலாவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

    உலகினை அழிவுப்பõதையில் கொண்டு செல்லும் அமெரிக்கஇஸ்ரேலிய கார்ப்பரேட் கனவான்களின் கொள்ளைலாப வியாபாரத்தின் ஒரு பகுதிதான் அணுமின் வியாபாரம்.

    அணுமின் திட்டத்தில் முன்னேறிய நாடுகளின் நிலைகள்

    1. உலகின் 60% யுரேனியவளம் (அணு உலை மூலப்பொருள்) கொண்ட ஆஸ்திரேலியாவில் மக்களின் நலன் கருதி ஒரு அணுமின் நிலையம் கூட நிர்மானிக்கப் படவில்லை.

    2. 1000 அணு உலைகள் அமைக்கப்போவதாக 1973 ல் அறிவிப்பு செய்த அமெரிக்கா, ஒட்டுமொத்தமாக 253 அணுஉலைகள் தொடங்குவதற்கு மட்டுமே இதுவரை அனுமதித்துள்ளனர். அதில் 71 அணுமின் திட்டம் தொடங்கும் முன்பே தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. 50 திட்டங்கள் கட்டுமானங்கள் தொடங்கிய நிலையில் (கூடங்குளம் போன்று) பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    புதிய 28 அணுமின் திட்டம் இயங்க துவங்கி பாதிலேயே இழுத்து மூடப்பட்டது. அங்கு மொத்தம் 104 அணுமின் உலைகள் மட்டுமே தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்காவில் கடைசியாக அணுமின் திட்டம் தொடங்க அனுமதி 1973 ல் வழங்கப்பட்டது. கடந்த 38 ஆண்டுகளில் புதிய அணுஉலை ஏதும் தொடங்க அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில்?

    1979 ல் ஏற்பட்ட மூன்று மைல் தீவு அணு உலை விபத்தும், அதை தொடர்ந்து அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் ஏற்படுத்திய எழுச்சியும் இன்று அமெரிக்காவில் பல மாகாண (தமிழ்நாட்டை போன்ற மாநில) அரசுகள் அணுஉலை தொடங்க தடை விதித்து சட்டம் இயற்ற காரணமாகியுள்ளது.

    1. உலகின் மிக அதிக அணுமின் நிலைய அடர்வு (33%) உள்ள பகுதியான ஐரோப்பிய யூனியனில் கடந்த 30 ஆண்டுகளில் புதிதாக அணுமின் நிலையங்கள் ஏதும் துவக்கப்படவில்லை. ஐரோப்பாவில் உள்ள 18 நாடுகளில் 8 நாடுகள்தாங்கள் ஒருபோதும் தம் தேசத்தில் அழிவை உண்டாக்கும் அணு உலைகளை அமைக்க மாட்டோம்என சட்டமியற்றியுள்ளன. மேலும், 5 நாடுகள் புதிய அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி 2020 க்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிடப்போவதாக அறிவித்துள்ளன. சுவிட்சர்லாந்து தனது மொத்த மின் தேவையில் 38% ஐயும், ஜெர்மனி 27%  (20,470 மெகாவாட்) ஐயும் அணுசக்தி மூலம் பெறுகின்றன. தனது நாட்டின் மொத்த மின் தேவையில் 75 சதவீதத்தை அணு மின்சாரம் மூலம் பெறும் பிரான்ஸ், ஜப்பான் அணுஉலை விபத்திற்கு பிறகு தனது நாட்டின் அணு மின்சார உற்பத்தியை விரைவில் பாதியாக குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.

    1. அணுசக்தி துறை நஷ்டம் ஏற்படும் ஒர் துறை என்பதை உணர்ந்து தான் முன்னணி அணுமின் உபகரண தயாரிப்பு நிறுவனமானசிமென்ஸ்தான் 2012 செப்டம்பர் முதல் அனைத்து அணுமின் திட்டங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

    2. உலகின் மிகப்பெரிய அணுமின் நிறுவனமான டோக்கியோ அணுசக்தி நிறுவனம் புகுஷிமா அணு உலை விபத்தால் உண்டான நஷ்டத்தால் திவாலாகியுள்ளது.

    3. இங்கிலாந்தின் மிகப்பெரிய அணுமின் நிறுவனமான சதர்ன் ஆற்றல் எனும் நிறுவனம் தனது அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது.

    மேலும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகள் தமது மின் தேவையின் பெரும்பகுதியை அணுமின்சாரத்தின் மூலம் பெறும் வேளையில், அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்தின் மூலம் பாடம் பெற்று அணுமின் திட்டத்தை கைவிட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவின் மொத்த மின் தேவையில் இன்று 2.4 சதவீதத்தையும், 2020 ல் அதிகபட்சமாக 5 % ஐயும் அணுசக்தி மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் இந்திய அரசோ உலக அளவில் காலாவதியாகிப்போன அணு தொழில் நுட்பத்தை, பல லட்சம் கோடி பொருளாதார சுமையை மக்களின் மீது திணித்து இத்திட்டத்தை பெற்றுக்கொள்ள முயலும் மன்மோகன் சிங் உண்மையில் நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அக்கறையுள்ள இந்தியப் பிரதமர்தானா? என்று நாட்டுப் பற்றாளர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.

    4. நமது பிரதமர் பொருளாதார மாமேதை மன்மோகன் சிங் கூறுவது போன்று அணுமின்சாரம் செலவு குறைந்த சிக்கனமான ஒன்றல்ல. மனிதன் பயன்படுத்தும் மின்சக்தியிலேயே மிக அதிக அளவு செலவுகளை உள்ளடக்கியதுதான் அணு மின்சாரம். ஏனெனில் அணு உலை கட்டுமான செலவு, உற்பத்தி செலவு, அதனை பாதுகாப்பதற்கான செலவு, ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதனை பத்திரமாக நீக்குவதற்கான செலவு என அது நஷ்டம் தரக்கூடிய ஒன்றாகும். ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்களினால் கொள்னை இலாபம் அடையும் ஆட்சியாளர்கள், பல்வேறு நஷ்டக்கணக்குகளை கோடிட்டு மக்களை வரிகளின் மூலம் பிழிந்து வரும் வேளையில், அரசை திவாலாக்கும் பொருளதார செலவுமிக்க  அணு உலைகளை கூடங்குளம் போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைத்தால் அதனால் உண்டாகும் நிதி சிக்கலை காரணம் காட்டி மக்களை மேலும் நசுக்கி விடுவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    எனவே பிரதமர் மன்மோகன்சிங் கூறுவது போன்று அணுமின் துறை ஒன்றும் ஆபத்தில்லாத, பாதுகாப்பான, செலவு குறைந்த ஒரு துறையல்ல என்பதும் அணுசக்தி இல்லை எனில் தமிழகமோ அல்லது இந்தியாவோ இருளில் மூழ்கிவிடாது என்பதை இதன் மூலம் அறிய தருகிறோம்.

    36 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவிலும் சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவிலும் மூடுவிழா கண்டு விட்ட பல்வேறு அணுசக்தி நிறுவனங்களின் அசூர பொருளாதார இலாபத்திற்காக இந்திய எரிசக்தி துறையை திறந்து விடுவதை பிரதமர் மன்மோகன்சிங் நிறுத்தி கொள்ள வேண்டும். அதற்காக தேசத்தின் பொருளாதார வளர்ச்சி என்ற சொல்லை திரும்ப திரும்ப கூறுவதையும் திருத்தி கொள்ள வேண்டும்.

    22 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பரில் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இன்று வரை அம்மக்கள் அரசின் உதவிக்காகவும், தமது மருத்துவ சிகிச்சைக்காகவும் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கின்றனர். ஒரு விபத்திற்கே போதிய நிவாரணம் தரவியலாத, அந்த வெளிநாட்டு கம்பெனிகளை தப்ப விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் ஆட்சியாளர்கள் அணு உலை விபத்து ஏற்பட்டால் எங்ஙனம் உதவுவார்கள் என்பது நம் அனைவர் முன் எழும் கேள்வி? கார்பைடு கம்பெனியின் மூலம் விழித்துக் கொள்ளாத இந்திய சமூகம், ஜப்பானின் புகுஷிமா விபத்தின் மூலமாவது படிப்பினை பெற்று எழுச்சி பெற வேண்டும்.

    இந்திய மின்துறை ஒரு பார்வை

    உலக மக்கள் தொகையில் 17% உள்ள தேசம், உலகின் 5 வது பெரிய (4%) மின் நுகர்வு (1,18,676 மெகாவாட்) செய்யும் தேசம், 2030 ல் மின் நுகர்வு 9.5 இலட்சம் மெகாவாட் என எதிர்பார்க்கப்படும் தேசம் தான் நமது இந்திய தேசம்.

    தனது மொத்த மின் உற்பத்தியில் 65.34%  அனல்மின் உற்பத்தி மூலமும், 21.53%  நீர்மின் உற்பத்தி மூலமும், 10.42%  மரபு சாரா எரிசக்தி (காற்றாலை, சூரியசக்தி, பயோமாஸ் போன்றவை) மூலமும், 2.7%  அணுமின் சக்தியின் மூலமும் பெறுகின்றது. மத்திய மின்சார ஆணைய அறிக்கை (201112) யின் படி தற்சமயம் நமது தேசத்தின் மின் தேவை 1,36,193 மெகாவாட்டும் பற்றாக்குறை 17,517 மெகாவாட் (13% ) ஆகவும் உள்ளது.

    உலகமயமாக்கல் அறிமுகப் படுத்தப்பட்ட பின் 1992 ம் ஆண்டு முதல் இன்று வரை மத்திய அரசு கூடுதலாக 2 இலட்சம் மெகாவாட் (ட்தீ) மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டது. ஆனால், 77,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.

    உலகமயமாக்கல் கொள்கைப்படி  இந்திய அரசு உலக வங்கி, ஆசிய வங்கி என பல்வேறு பன்னாட்டு வங்கிகளிடம் கடனைப்பெற்று, அக்கடனுக்கு பகரமாக 199194 ம் ஆண்டுகளுக்கிடையே மட்டும் 90,000 ட்தீ மின் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களுடன் 234 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. 32%  இலாபம், ஏலம் இல்லாத நேரடி ஒப்பந்தம், கடன், வரிச்சலுகை, மானியம் என ஏராளமானவற்றை அத்தனியார் நிறுவனங்களுக்கு தாரளமாக வாரி வழங்கினர். அவை 2001 வரை வெறும் 2700 (ட்தீ) மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்தது. எனவே தான் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

    மேலும், கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசு மின் உற்பத்தி திறனையோ, புதிய உற்பத்தி முறைகளையோ, உற்பத்தி நிலையங்களையோ துவங்காததால் நமது தொழிற்துறை சர்வதேச நாடுகளுடன் போதிய அளவுக்கு போட்டியிட முடிவதில்லை. அண்மை காலங்களாக அணுசக்தி மூலம் மின்சார உற்பத்தியை அசுர வேகத்தில் பெருக்க போவதாக அறைகூவல் விடுக்கும் ஆட்சியாளர்கள், கடந்தகாலங்களில் ஆமை வேகத்தில் செயல்பட்டதால் தான் இன்று இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும் வசதியாக மறந்துவிட்டனர். 2017 ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 1.17 இலட்சம் மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள நமது அரசு, இதில் 89,000 மெகாவாட் மின் உற்பத்தியை தனியார் மூலம் மட்டுமே செய்ய திட்டமிட்டுள்ளது.

    இத்தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் அதிக செலவை உள்ளடக்கிய அணுஉலையை அடிப்படையாக கொண்டதல்ல, மாறாக அனல் நீர் மற்றும் மரபு சாரா எரிசக்தி மூலமாகும். ஆனால், அரசோ கருவூலத்தை காலியாக்கும் அணு மின்சாரப் பாதையில் செல்வது மட்டுமின்றி கூடுதல் விலையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் தேவையற்ற செலவினையும் செய்கின்றது. எல்லா துறைகளிலும் உலகமயத்தை அரங்கேற்றி அழகு பார்த்து வரும் மத்திய அரசு மின்துறையையும் விட்டு வைக்க வில்லை.

    நிலம், நீர், காற்று, நெருப்பு எவ்வாறு ஒர் சக்தியாக விளங்குகின்றதோ, இவை அனைத்திலிருந்தும் பெறப்படும் மின்சாரமும் சக்தி வாய்ந்ததாக திகழுகின்றது என்றால் மிகையல்ல. அத்தகைய சக்திவாய்ந்த மின்சக்தியில் சுரண்டலை ஏற்படுத்தும் தேசிய மற்றும் சர்வதேச சுயநலவாதிகளுக்கு நமது ஆட்சியாளர்கள் துணை போவது வேதனைக்குரியதும், ஆபத்தானதும் மட்டுமின்றி இதை மக்கள் உணராமலிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். மத்திய அரசு திட்டமிட்டுள்ள உற்பத்தி அளவான 24,000 ட்தீ மின்சாரம் ரிலையன்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள 33,500 விட 9,500 குறைவு என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

     

  • மேலும்....

  • ஃபாசிஸ்டுகள் ஏற்றிய பாகிஸ்தான் கொடி?! நயவஞ்சக வரலாற்றின் தொடர்ச்சி... 08-பிப்ரவரி-2012

    முஸ்லிம்களுக்கெதிராக மீண்டும் ஒரு கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்துள்ளார்கள் ஃபாஸிஸ்டுகள்.  தக்க நேரத்தில் காவல்துறை ஸ்ரீராம் சேனா என்ற ஃபாசிச பயங்கரவாத கும்பலைக் கைது செய்ததால் ஒரு பெரும் கலவரம் தடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி 1 ம் தேதி புது வருடப் பிறப்பன்று பிஜப்பூர் மாவட்டம் சிந்தகி என்ற இடத்திலுள்ள தாசில்தார் அலுவலகத்தில் ஃபாசிஸ்டுகள் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக பாகிஸ்தான் கொடியை ஏற்றிவிட்டார்கள்.

    மறுநாள் வழக்கம் போல் அங்குள்ள மீடியா அத்தனையும் விஷத்தைக் கக்க ஆரம்பித்தன. முஸ்லிம் பயங்கவராதிகள் தான் இதற்குக் காரணம் என்றும், அவர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும் என்றும் பல கதைகள் வெளிவந்தன.

    இன்னும் சில கன்னடப் பத்திரிகைகள் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் தாம் இதனைச் செய்துள்ளனர் என்று அங்கலாய்த்தன. அதன் பிறகு நடந்த நிகழ்வுதான் உச்சக்கட்ட கொடுமை.

    ஃபாசிச பயங்கரவாத அமைப்புகளான பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் முகமாக அந்தப் பகுதியில் ஒரு நாள் பந்துக்கு அழைப்பு விடுத்தார்கள். இந்த பந்தின் நோக்கமே முஸ்லிம்களுக்கெதிராக உணர்வுகளைத் தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துவதுதான். அதற்குத் துணையாக அவர்கள் முஸ்லிம்களின் கடைகளையும், வாகனங்களையும் தாக்கினார்கள்.

    ஆனால், பெங்களூரில் ஆறு ஸ்ரீராம் சேனா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டவுடன் இந்தப் பயங்கரவாதிகள் தங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டார்கள். பிஜப்பூர் போலீஸ் சூப்பிரண்டெண்டால் கைது செய்யப்பட்ட இந்த ஆறு பெரும் கல்லூரி மாணவர்கள். அவர்களை காவல்துறை விசாரணை செய்தபொழுது ஸ்ரீராம் சேனாவுக்கு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெறுவதற்காக கலவரத்தைத் தூண்டுவதற்காகவே இதனைச் செய்ததாக ஒப்புக்கொண்டார்கள்.

    தேசபக்தி உணர்வுகள் தூண்டப்பட்டு அது தங்களுக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் மாறும் என்று அவர்கள் எதிர்பார்த்தே இந்தச் சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளார்கள்.

    ஆனால், வழக்கம் போல் தங்கள் இயக்கத்தினர் கைதானவுடன் ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் இவர்கள் எங்கள் இயக்கத்தினர் அல்ல, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் இவரையும் கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இதே சாட்சாத் பிரமோத் முத்தலிக்தான் தெஹல்கா ஆங்கில வார இதழ் மறைமுகமாகப் பதிவு செய்த வீடியோவில் சிறுபான்மையினருக்கெதிராக கலவரத்தைத் தூண்டுவதற்கும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கும் பணம் கேட்டதாகக் கூறியுள்ளார்.

    இந்த இலட்சணத்தில் காவல்துறை ஸ்ரீராம் சேனாவுக்கெதிராக நிறைய திட்டங்களை வைத்துள்ளது என்று வேறு இவர் கூறுகிறார்.

    தென் கன்னட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராம் நாத் ராய் ஸ்ரீராம் சேனா இத்தகைய தேசவிரோதச் செயலில் ஈடுபட்டதால் இதனைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஓட்டுக்களை அள்ளுவதற்காகவே சங்க பரிவார் இத்தகைய ஈனச் செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜனதா தள் (எஸ்) தலைவர் .. குமாரசாமி.

    கையில் இஸ்மாயீல் என்று பச்சை குத்தி நாதுராம் கோட்சே என்ற சனாதன ஃபாசிஸ்டு காந்தியைக் சுட்டுக் கொன்றதிலிருந்து இந்த நயவஞ்சக வரலாறு தொடர்கிறது.

    தங்கள் ஃபாசிசக் கொள்கைகளை வளர்ப்பதற்காக தங்கள் சொந்த மக்களையே இவர்கள் கொல்வதற்கு எந்தத் தயக்கமும் காட்டமாட்டார்கள்.

    இதே ஸ்ரீராம் சேனா கர்நாடகாவில் விவேகானந்தர் சிலையைக் களங்கப்படுத்தியது. ஒரு கோவிலையும் களங்கப்படுத்தியது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகு இவற்றைச் செய்தது முஸ்லிம்கள் தான் என்று முஸ்லிம்களுக்கெதிராக ஹிந்துத்துவவாதிகள் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

    ஏன், 2008 லும் இதே மாதிரி பாகிஸ்தான் கொடியை திப்பு சுல்தான் சர்க்கிள் என்ற இடத்தில் ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள் ஏற்றி விட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டார்கள்.

    இத்தகைய ஃபாசிஸ்டுகள் இருக்கும் வரை இந்த நயவஞ்சக வரலாறு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இந்த நயவஞ்சக வரலாறு முடிவுக்கு வர வேண்டுமென்றால் இந்த ஃபாசிஸ்டுகளை  தனிமைப்படுத்தி, தேசத்தை இவர்களின் சதிச்செயல்களிலிருந்து பாதகாக்க ஒவ்வொரு இந்தியனும் சங்கல்பம் எடுக்க வேண்டும் ஞ்

  • மேலும்....

  • ஊடகம்: கடிவாளமா சுயகட்டுப்பாடா? 08-பிப்ரவரி-2012

    1950களின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி... மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தது. இராணுவ அதிகாரியான கார்லஸ் அர்மாசுடன் இணைந்து இதற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. ஜனவரி 29, 1954 அன்று அர்மாசுடன்  சி...வின் அதிகாரியான ஹனி திட்டங்களுக்கு இறுதி வடிவத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பினார். அடுத்த நாள் இவர்கள் பேசிய அனைத்து விபரங்களும் விபரமாக பெரும்பாலான பத்திரிகைகளில் வந்தன.

    கவுதமாலா அதிபர் அர்பன்ஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான திட்டங்கள் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டினார். தங்களின் இரகசியத் திட்டங்கள் பத்திரிகைகளில் பகிரங்கமாக வந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர் சி... அதிகாரிகள். சி...வின் ஒரு அதிகாரி இரகசிய திட்டம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் தனது ஹோட்டல் அறையில் விட்டுச் சென்றதும் பின்னர் அது அதிபரின் கைகளுக்கு சென்றுள்ளது என்பதையும் அறிந்தனர்.

    தங்களின் அயோக்கித்தனத்தை மறைக்க மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் வேலைகளில் ஹனி இறங்கினார். பரபரப்பான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்குமாறு கட்டளைகளை பிறப்பித்தார். பறக்கும் தட்டுகள், ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்ற பெண்மணி போன்ற செய்திகளை கவுதமாலாவின் கிராமப்புறப் பத்திரிகைகளில் வருமாறு பார்த்து கொண்டார். புரட்சியாளர்களை கொலை செய்வதற்காக ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் வருகின்றன போன்ற செய்திகளை நகர்ப்புறங்களில் உலவ விட்டார். எப்படியேனும் தங்களின் ரகசிய திட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் இதனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பது வேறு விஷயம்.

    இதே நடைமுறைதான் இன்று நமது நாட்டில் அரசியல்வாதிகள், ஆதிக்க சக்திகள், மாஃபியா கும்பல்கள் ஆகியோர்களால் பயன்படுத்தப்படுகின்றன. துரதிஷ்டவசமாக இவர்களின் சதிகளுக்கு பெரும்பான்மையான ஊடகங்கள் துணை போகின்றன. மக்கள் எதை குறித்து பேச வேண்டும், எதனை சிந்திக்க வேண்டும், யாரை ஹீரோவாக்க வேண்டும், யாரை வில்லன் ஆக்க வேண்டும் என அனைத்தையும் இன்று ஊடகங்கள்தான் முடிவு செய்கின்றன.

    பல வழக்குகளில் விசாரணையையும் நடத்தித் தீர்ப்பையும் ஊடகங்களே எழுதி முடித்து விடுகின்றன. சில மாதங்களுக்கு முன், பிரபல பத்திரிகையாளரான ஜோதிர்மாய் டே மும்பையில் சுட்டு கொல்லப்பட்டார். இவரை தாவூத் இப்ராஹிமின் கும்பல்தான் கொலை செய்தது என்றே பெரும்பான்மையான பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. காவல்துறையின் விசாரணையும் அதே கோணத்தில் தான் சென்றது.

    ஆனால் ஜோதிர்மாயை கொலை செய்தது சோட்டா ராஜன் கும்பல்தான் என்ற உண்மையை காவல்துறையினர் பின்னர் கண்டுபிடித்தனர். காவல்துறை ஜிக்னா வோரா என்ற பத்திரிகையாளரையும் கைது செய்தனர். ஜோதிர்மாயை கொலை செய்தது தாவூதின் கும்பல்தான், என்று தான் பணியாற்றும் ஏசியன் ஏஜ் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி காவல்துறையின் கவனத்தை திசை திருப்ப இவர் முயற்சித்தாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஊடகங்களின் செயல்பாடு இந்த ரீதியில் தான் இன்று உள்ளது.

    செய்தி மற்றும் காட்சி ஊடகங்கள் இரண்டும் இதற்கு விதிவிலக்கல்ல. தற்போது மின்னனு ஊடகங்ளும் இதில் இணைந்துள்ளன. இவை அனைத்திலும் நேர்மையாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் ஊடகங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஆனால் கார்ப்பரேட் முதலைகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படும் பண முதலைகளின் முன்னால் இவர்களின் குரல் மெதுவாகத்தான் கேட்கிறது. நாட்டு நலனில் அக்கறை இல்லாமல் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் வேலைகளைதான் இன்று பெரும்பான்மையான ஊடகங்கள் செய்து வருகின்றன.

    நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதித்து கொண்டிருக்கும் போது சச்சின் தனது நூறாவது சதத்தை எப்போது எட்டுவார் என்ற கேள்வியை எழுப்பி மக்களின் கவனத்தை திசைத் திருப்பி விடுவர். ஒரு சாதாரண .பி.எல் போட்டியால் விலையேற்ற பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முடிகிறது. நமது நாட்டில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமலும், போஷாக்கான உணவு இல்லாமலும், ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்து வருகின்றனர்.

    சமீபத்தில் பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் நோயால் தினமும் ஒன்று என்ற கணக்கில் குழந்தைகள் இறந்தனர். மக்கள் இதனை குறித்து விவாதிக்க ஆரம்பிக்கும் போது ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்ததை பற்றி பக்கம் பக்கமாக எழுதியும் பல மணி நேரங்கள் அதனை பற்றிய செய்திகளை ஒளிபரப்பியும் மக்களின் கவனத்தை திசைத் திருப்புகின்றனர். 1996 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் நமது நாட்டில் இரண்டரை இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதனை குறித்து எத்தனை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டனர் என்பதை நாம் விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் இதே காலகட்டத்தில் ஷாருக்கான் எத்தனை படத்தில் நடித்தார் என்ற புள்ளி விபரங்கள் தெளிவாக அனைவரிடமும் இருக்கும்.

    இன்று கிரிக்கெட் மற்றும் பாலிவுட் ஆகிய இரண்டு விஷயங்களை மக்கள் விவாதிக்கும் ஒரு பெரும் சக்தியாக மாற்றிய பெருமை ஊடகங்களுக்கு உண்டு என்றால் அது மிகையல்ல. இன்று பெரும்பான்மையான சேனல்கள் பாலிவுட்டை நம்பிதான் உள்ளன என்பது தான் உண்மை. ஒரு காலத்தில் தரமானப் பத்திரிகை என்றும் தரமான சேனல் என்றும் பெயர் பெற்றவர்கள் கூட இன்று நடிகைகளின் படத்தைக் காட்டியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு மாறியுள்ளனர்.

    நாட்டில் குறிப்பிட்ட ஒரு சாராரை தீவிரவாதிகளாக மாற்றிய பெருமை இந்த ஊடகங்களுக்கு உண்டு. குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த உடன் அதனை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று இவர்களாக தீர்ப்பை உடனடியாக வழங்கி விடுவார்கள். இந்தியன் முஜாஹிதீன், டெக்கான் முஜாஹிதீன் என்று ஏதேனும் ஒரு பெயரை வைத்து ஒரு அருமையான திரைக்கதையை வேகமாக உருவாக்கி விடுவார்கள். இதில் உளவுத்துறையின் பங்கும் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை. குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுதினம் பிரவீண் சாமி போன்றவர்கள் ஏஸி அறையில் அமர்ந்து கொண்டு தங்களின் பேனாக்களை கூர்மையாக்கி கொண்டு பத்திப் பத்தியாக கதைகள் எழுதி பணம் சம்பாதிப்பர். பிரவீண் சாமியால் தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டு நீதிமன்றத்தால் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டவர்கள் என்று ஒரு தனி பட்டியலையே தயாரிக்கலாம். இத்தகையவர்களின் எழுத்துகளும் காட்சி ஊடகங்களின் செய்திகளும் விசாரணையை வேறு கோணத்திற்கு செல்லாமல் திறமையாக தடுத்து வந்தன.

    இவர்களின் வார்த்தைகளால் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம் ஏராளம். அப்பாவிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்த பெருமை சில பத்திரிகைகளை சாரும். இவர்களால் தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டால் அதனை ஏதேனும் ஒரு ஓரத்தில் பதிவு செய்து விட்டு அமைதியாக இருந்து விடுவார்கள். இல்லையென்றால் அதனை குறித்து வாய் திறக்க மாட்டார்கள். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் தற்போது நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்ட போது கட்டுக்கதைகளை பக்கம் பக்கமாக எழுதியவர்கள் தற்போது ஏனோ மௌனம் காத்து வருகின்றனர்.

    காவல் துறையில் உள்ள சில நேர்மையான அதிகாரிகளால் உண்மையான குற்றவாளிகள் உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டனர். அவர்களில் ஒருவரான ஹேமந்த் கர்கரே கொலை குறித்து எழுந்த நியாயமான கோரிக்கைகளையும் இந்த ஊடகங்கள் முன்வைக்கவில்லை. நாட்டில் நடைபெற்ற பெரும்பான்மையான குண்டு வெடிப்புகளில் இந்துத்துவ சக்திகளுக்கு பங்குள்ளது என்ற கருத்து காவல்துறை வட்டாரங்களிலேயே ஒலிக்கிறது. அதனை திசை திருப்ப அன்னா ஹஸாரே என்ற ஆயுதத்தை பயன்டுத்த ஆரம்பித்தனர் ஃபாசிஸ சக்திகள். அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை இந்த ஊடகங்கள் செய்து வருகின்றனர். நாட்டில் தற்போது ஏராளமான தன்னார்வ ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் இவை குறித்து மௌனமாக இருக்கும் ஊடகங்கள் அன்னா ஹஸாரேவின் நாடகத்திற்கு அளவிற்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர். அன்னா  ஹஸாரே நடத்தும் போராட்டம் இரண்டாவது சுதந்திர போராட்டமாம். சுதந்திர போர் குறித்து இவர்களுக்கு என்ன தெரியும் என்ற கேள்வி இப்போது நமக்கு எழுகிறது.

    காட்சி ஊடகங்கள் எவ்வாறு பரபரப்புச் செய்திகளை வெளியிடுகின்றன, என்பது குறித்து மும்பையில் இருந்து வெளிவரும் மிட்டே பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் சச்சின் கல்பக் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார். அதனை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும். 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், சக பத்திரிகையாளர்களுடன் இவரும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார், பத்திரிகையாளர்கள் அனைவரும் சகஜமாக பேசி கொண்டிருந்தனர்.

    அடுத்த சில நிமிடங்களில் கேமராக்களின் முன் பேசும் போது பல அதிர்ச்சியான பரபரப்பானத் தகவல்களைத் தெரிவித்தனர். எங்கிருந்து இந்த செய்திகளை பெற்றீர்கள் என்று சச்சின் அவர்களிடம் கேட்ட போது, ‘ஒவ்வொரு முறையும் நாங்கள் புதிய செய்திகளை வெளியிட வேண்டும் என்று ஸ்டுடியோவில் உள்ளவர்கள் விரும்புகின்றனர். அதனால்தான் நாங்கள் இவ்வாறு செய்திகளை வெளியிடுகிறோம்என்று கூறினார்களாம்.

    ஊடக உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மூத்த பத்திரிகையாளர் இவ்வாறு கூறினார். ‘காட்சி ஊடகங்களின் ஆசிரியர்கள் அன்றைய செய்தித்தாள்களை படித்து அதன் அடிப்படையில் தங்கள் செய்திகளை அமைத்துக் கொள்கின்றனர். பத்திரிகையின் ஆசிரியர்கள் தங்கள் அறைகளில் அமர்ந்து கொண்டு டிவி சேனல்களை பார்த்து அதன் அடிப்படையில் தங்கள் செய்திகளை அமைக்கின்றனர்’. இது தான் இன்றைய ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் முறை.

    ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படுவதுதான் பத்திரிகைதுறை. நாட்டு மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லவேண்டிய மகத்தான பணியை இவர்கள் செய்ய வேண்டும். உலகில் ஏற்படும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் தரத்தையும் இவர்கள் உயர்த்த வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றைய பெரும்பான்மையான ஊடகங்கள் அறிவியலுக்கு மாற்றமான கருத்துகளையே மக்கள் மன்றத்தில் முன் வைக்கின்றனர். இன்று ஜோசியம் குறித்த செய்திகள் இல்லாத பத்திரிகை அல்லது சேனலை பார்ப்பது மிகவும் அரிது. விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் எந்த கல் மோதிரம் போட்டால் ராசியானது என்ற தகவலை பெரும்பாலும் எல்லா சேனல்களும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

    அத்துடன் நமது கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாற்றமான நிகழ்ச்சிகளைத்தான் இன்றைய சேனல்கள் வழங்கி வருகின்றன. ஆடல்களும் பாடல்களும் தான் இன்றைய முக்கியமான நிகழ்ச்சிகள். சிறுவர்கள் நிகழ்ச்சி என்று எடுத்து கொண்டால் அங்கேயும் இதே ஆட்டம் பாட்டம் தான். மக்களுக்கு தேவையான மக்களின் அறிவை வளர்க்கக் கூடிய நிகழ்ச்சிகள் மிகவும் குறைந்த அளவிலேயே கொடுக்கப் படுகின்றன.

    ஊடகங்கள் குறித்த இந்த கருத்தை பெரும்பாலும் அனைவரும் தங்களின் மனதில் கொண்டுதான் உள்ளனர். சமீபத்தில் பிரஸ் கவுன்சிலின் தலைவராக பதவியேற்ற முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ இந்தக் கருத்துக்களை தெரிவித்த பிறகு, அது மீண்டும் ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. மக்களின் கவனத்தை திசைத்திருப்ப கூடிய சினிமா மற்றும் கிரிக்கெட் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன, ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக வேண்டுமென்றே சித்தரிக்கின்றனர் மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கு மாற்றமான கருத்துக்களைப் பரப்புகின்றனர் என்று தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்தார் நீதிபதி கட்ஜூ.

    பத்திரிகைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டால் அதற்காக போராடுவதாக கூறிய அவர், பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் கடுமையாக கண்டித்தார். இத்துடன் மிக முக்கியமான மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டார், பத்திரிகைகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட பிரஸ் கவுன்சிலுக்கு அதிகப்படியான அதிகாரம் தேவை என்பதுதான் அது. 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கவுன்சிலுக்கு அதிகாரம் என்று பெரிய அளவில் சொல்லும் படி எதுவும் கிடையாது. தவறான அல்லது அவதூறு செய்திகள் பிரசுரம் செய்யப்பட்டால் அந்த வழக்கு அல்லது ஆசிரியரை இந்த கவுன்சிலால் கண்டிக்க மட்டுமே முடியும். இதுதான் இந்த கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகப்படியான அதிகாரம்.

    நீதிபதி கட்ஜூ கூறுவது போல் இதனை மட்டும் வைத்துக் கொண்டு தவறிழைக்கும் பத்திரிகைகளைச் சரி செய்ய முடியாது. ஊடக நெறிகளை மீறும் பத்திரிகைள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது கட்ஜூவின் கருத்து. அபராதம் விதித்தல், அரசாங்க விளம்பரங்களை ரத்து செய்தல், பத்திரிகை உரிமையை அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்தல் ஆகியவை அவர் முன்வைக்கும் சில வரைவுகள். கட்ஜூவின் இந்த கருத்துக்கு பெரும்பாலான பத்திரிகைகள் தங்கள் எதிர்ப்பை தெரித்துள்ளன. தங்களுக்கு கடிவாளம் ஏதும் தேவையில்லை, தாங்களாகவே சுய கட்டுப்பாடுடன் செயல்படுவோம் என்பது அவர்களின் வாதம். இவர்களின் சுய கட்டுப்பாடு இலட்சனத்தைத் தான் நாம் நாள் தோறும் கண்டு வருகிறோம். எத்தனை முறை குண்டு  வைத்தவர்கள் முஸ்லிம்கள் கிடையாது என்று கூறினாலும் மீண்டும் அதையே செய்து வருவதைத்தான் நாம் கண்டு வருகிறோம். கோவை குண்டுவெடிப்பு நடைபெற்றவுடன்வெடிகுண்டு ஆயிஷாஎன்று பத்திரிகைகள் பல மாதங்கள் எழுதி வந்தன. நூறு கிலோ எடையுள்ள குண்டுடன் இந்த பெண் திரிந்து வருவதாக எவ்வித வெட்கமும் இல்லாமல் செய்திகளை வெளியிட்டனர். ‘என்னுடைய எடையே அப்போது நாற்பது கிலோ தான், என்னால் எப்படி நூறு கிலோ குண்டை தூக்க முடியும்?’ என்று அந்த பெண் அப்பாவியாக கேட்டார். எந்த சுயகட்டுப்பாட்டுடன் இவர்கள் இந்த செய்தியை வெளியிட்டனர்?

    அத்துடன் முஸ்லிம்களின் நலனுக்காக போராடி வரும் இயக்கங்களையும் குறி வைப்பதில் இவர்கள் தவறுவதில்லை. தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில்களை அளித்தாலும் தொடர்ந்து அதே அவதூறுகளை பரப்புவதில் இவர்கள் எந்த குறையும் வைப்பதில்லை.

    அத்துடன் மக்களின் மத உணர்வுகளோடு விளையாடும் போக்கையும் இவர்கள் மாற்றிக் கொள்வதாக இல்லை. ரமலான் முதல் நாளில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கேலிச் சித்திரத்தை வெளியிடுவதில் தினமலருக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அதே போன்று முஹர்ரம் சம்பவம் குறித்து, தெரியாமல் அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே பாத்திமா (ரலி) அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று செய்தி வெளியிடுவதிலும் இவர்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

    அப்பாவிகளை குற்றவாளிகள் என்று முத்திரையிட்டுச் செய்திகளை வெளியிட பிரவீண் சாமிகளுக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் இதே நிலையை இவர்கள் கடைபிடிப்பது ஏன்? அதிகப்படியாக தங்களை கண்டிக்க மட்டுமே முடியும் என்ற தைரியம் தான் இவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. சுய கட்டுப்பாடு என்பது இவர்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதுதான் நடைமுறையில் உள்ள உண்மை.

    ஆக தவறான செய்திகளையும் அவதூறுகளையும் வெளியிடும் பத்திரிகைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவேபிரஸ் கவுன்சிலுக்கு முறையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதே சமயம் நேர்மையான கருத்துகளை முன்வைக்கும் பத்திரிகைகளை இதன் மூலம் குறிவைக்க கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    தற்போதுள்ள பிரஸ் கவுன்சில் அச்சு ஊடகங்களை மட்டும்தான் கண்காணிக்கும். தொலைக்காட்சி சேனல்களோ மின்னணு ஊடகங்களோ இதன் வரையறைக்குள் வராது. சேனல்களை கண்காணிக்க செய்தி ஒளிபரப்பாளர்கள் சம்மேளனம் உள்ளது. இதுவும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இன்று பெரும்பான்மையான அச்சு ஊடகங்கள் தங்களின் இணையதளத்தையும் கொண்டுள்ளனர். ஆனால் இவற்றை கண்காணிக்க எந்த பிரிவும் கிடையாது. எனவே தான் இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மீடியா கவுன்சிலை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி கட்ஜூ தெரிவித்துள்ளார்.

    மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுதான் ஊடக துறை. மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்தும் ஆற்றலை அது பெற்றுள்ளது. இத்தகைய ஊடகத்துறையை கட்டுப்பாடில்லாமல் செயல்பட விட்டால் சமூகத்தில் ஒரு பிரிவினரை குற்றப்பரம்பரை ஆக்கி நாட்டை கற்காலத்திற்கு அழைத்து சென்று விடுவார்கள். எனவே அனைத்து ஊடகங்களின் செயல்பாடுகளும் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான முறையான சட்ட வரையறைகளுடன் ஒரு மீடியா கவுன்சில் உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்பட்டதுடன்  நில்லாமல் நியாயமாக செயல்படவும் வேண்டும். நாம் முன்னர் குறிப்பிட்டது போல் நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்தும் ஆயுதமாக இது மாறி விடக்கூடாது. நீதிபதி கட்ஜூவின் பதவி காலத்திலாவது இதற்கான பதில் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • மேலும்....

  • மேலும்....

  • மேலும்....

  • குர்ஆனிய பாடம்: இறைநம்பிக்கையின் பலம் 16-அக்டோபர்-2011

    faith

    நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே கடவுளாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை.

    இஸ்லாத்தின் அடிப்படையாக இந்த இறைநம்பிக்கை உள்ளது. எதற்காக? இந்த இறை நம்பிக்கை ஒருவன் மனதிற்கு சென்றுவிட்டால் அவன் அளப்பறிய சக்தியை பெறுகிறான். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கு அஞ்சாததால் அவனது வாழ்க்கையில் எவ்வித சலனமும் இல்லை. அல்லாஹ்வின் மீதான அச்சம் இருப்பதால் அவனை கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவுகள் எதுவும் இல்லை. இதனை தான் வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது.

    இன்று நாமும் இறைநம்பிக்கை கொண்டுள்ளோம். நம்மில் பலருக்கு இந்த இறைநம்பிக்கை என்னும் பரிசு மிகவும் எளிதாக கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. எளிதாக கிடைத்ததால் தான் என்னவோ நாம் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்! இதனால்தான் நமக்கு பல படிப்பினைகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான். குர்ஆனிலும் சான்றோர்களின் வாழ்க்கையிலும் இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனின் ஒரு சம்பவம் இறை நம்பிக்கையின் பலம், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது.

    நபி மூஸா(அலை) அவர்கள் இறைவனின் செய்தியை பெற்றுக் கொண்டு அதனை அப்போதைய அரசனாக இருந்த பிர்அவ்னிடம் கொண்டு செல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை மொத்தமாக வைத்து அனுபவித்து கொண்டிருப்பவனுக்கு அல்லாஹ் மட்டும்தான் கடவுள் என்பதை ஜீரனிக்க முடியவில்லை. ‘நீர் கொண்டு வந்திருக்கும் அத்தாட்சி எதையும் காட்டும்’ என்று முதலில் கேட்டான். மூஸா(அலை) தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது பெரிய பாம்பாகிவிட்டது. தனது கையை சட்டைப்பையில் இருந்து வெளியே எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது. பிர்அவ்னின் மனது உண்மையை ஏற்க மறுத்தது. அவனது துதிபாடிகளும் ‘இவர் ஒரு திறமையான சூனியக்காரர்’ என்று கூறினர். ‘இவரை எவ்வாறு எதிர்கொள்வது?’ என்று தனது சகாக்களுடன் ஆலோசணை செய்தான். ‘நமது நாட்டின் திறமையான சூனியக்காரர்கள் அனைவருக்கும் அறிவிப்பு கொடு. அவர்கள் இவருடன் போட்டியிட்டும்’ என்று கூறினர் சகாக்கள்.

    வந்த சூனியக்காரர்கள் போட்டி ஆரம்பம் ஆவதுற்கு முன் தெளிவாக ஒரு கேள்வியையும் கேட்டுக் கொண்டார்கள். ‘மூஸாவை வென்றுவிட்டால் அதற்குரிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமல்லவா?’ என்று கேட்டார்கள். தங்கள் சூனியத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்தது. பிர்அவ்னும் வாக்குறுதியை கொடுத்தான். ‘நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்’ என்றான். இதை விட வேறு என்ன வேண்டும்? ஆட்சியை கையில் வைத்திருப்பவனுக்கு நெருக்கமாகி விட்டால் விரும்பியது எல்லாம் கிடைக்குமே. அதிகாரத்தை பயன்படுத்தி நாமும் சிறிது ஆட்டம் போடலாமே.. இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் போடும் ஆட்டத்தை பார்த்தால் அந்த சூனியக்காரர்களின் நிலையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

    பிர்அவ்னின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகத்தில் போட்டியில் குதித்தனர். தங்களின் தடிகளை எறிந்து மக்களின் கண்களை மயக்கி மகத்தான சூனியத்தை செய்தனர். வெற்றியின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக அவர்கள் உணர்ந்த போது, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களை தடியை எறியுமாறு அறிவித்தான். எறிந்தவுடன் அது பெரிய பாம்பாகி அவர்களின் கற்பனைகள் அனைத்தையும் விழுங்கி விட்டது. சூனியக்கலையில் ஜாம்பவான்களாக இருந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தங்களின் சூனியங்கள் வீணாகி விட்டதை உணர்ந்த அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். தாங்கள் சிறுமைபடுத்தப்பட்டதையும் உணர்ந்தனர்.

    தோல்வியை கண்டவர்கள் அத்துடன் நிற்கவில்லை. இத்தனை காலம் தாங்கள் செய்து வந்த சூனியங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதையும் உணர்ந்தனர். மூஸா என்ற சாதாரண மனிதரால் இதனை செய்திருக்க முடியாது. அவருக்கு மேலாக ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தார்கள். தங்களின் சக்திகளுக்கெல்லாம் மேலான சக்தி பெற்றவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதையும் அறிந்தனர். தங்களின் சூனியத்தின் மீது நம்பிக்கை கொண்ட பிர்அவ்னை விட அல்லாஹ்தான் உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டனர். உணர்ந்தவர்கள் உடனே உரக்க உரைத்தனர், ‘அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவன் ஆவான்’ அதுவரை நிராகரிப்பின் பக்கம் இருந்தவர்கள், அல்லாஹ்வின் வல்லமையை கண்டவுடன் சரண் அடைந்தனர்.

    தன்னுடைய அதிகாரத்தை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூனியக்காரர்கள் மூஸாவின் பக்கம் சென்றதை பிர்அவ்ன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்னரே நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? இது மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சி என்று கூறினான். எஞ்சியிருக்கும் மக்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த பிர்அவ்ன் அராஜகத்தின் பக்கம் திரும்பினான். புதிதாக நம்பிக்கை கொண்ட அந்த மக்களை நோக்கி ‘உங்கள் அனைவரையும் மாறு கை மாறு கால் வாங்கி சிலுவையில் அறைவேன்’ என்று பயமுறுத்தினான். இப்போது தானே நம்பிக்கை கொண்டார்கள், சிறிது பயம் காட்டினால் மீண்டும் நம் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்தான் போலும்.

    ஆனால் அந்த மக்களோ மிகவும் உறுதியாக இருந்தார்கள். ‘நாங்கள் எங்கள் இரட்சகனின் பக்கமே திரும்ப செல்வோம். அவனது அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காக நீ எங்களை பழி வாங்குகிறாய்’ என்ற தெளிவாக கூறினார்கள். தங்களின் நம்பிக்கையில் தாங்கள் உறுதியாக இருக்க இறைவனிடம் ஒரு பிரார்த்தனையும் செய்தார்கள். ‘எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக, முஸ்லிம்களாக எங்களை கைப்பற்றி கொள்வாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

    மூஸாவை தோற்கடிக்க வேண்டும், பிர்அவ்னுக்கு நெருக்கமானவர்களாக ஆக வேண்டும் என்று விரும்பிய மக்கள், அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து அவனை நம்பிக்கை கொண்ட பிறகு அப்படியே மாறிவிட்டார்கள். பிர்அவ்னின் நெருக்கத்தை விட அல்லாஹ்வின் நெருக்கத்தை தேர்ந்தெடுத்தார்கள். பிர்அவ்னிடம் கொள்ளும் நெருக்கமானது சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும், ஆனால் அல்லாஹ்வின் நெருக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்தார்கள்.

    அல்லாஹ்வின் நம்பிக்கை மனதில் வந்த பிறகு வேறு எந்த சக்திக்கும் அவர்கள் அடிபணிபவர்களாக இல்லை. பிர்அவ்னின் குணத்தையும் அவனது கொடூரத்தையும் நேரடியாக கண்டவர்கள். அதிகார மமதையில் எதை வேண்டுமென்றாலும் செய்வான் என்பதையும் அறிந்தே வைத்திருந்தார்கள். அதுவரை அவன் முன் குனிந்து நின்றவர்கள், இறைநம்பிக்கை வந்தவுடன் அவனுக்கெதிராக உறுதியாக நின்றார்கள். தங்களின் நம்பிக்கையும் உறுதியும் தங்களின் உயிரை பறிக்கும் என்பதை அறிந்த பிறகும் அதற்கு அவர்கள் கவலைபடவில்லை.

    பிர்அவ்ன் கொடுக்கும் தண்டனை சில நிமிடங்களிலோ அல்லது மாதங்களிலோ முடிந்து விடும். ஆனால் பிர்அவ்னுக்கு கட்டுப்பட்டால் நிலையான மறுமையில் நிரந்தரமான வேதனையை அனுபவிக்க வேண்டுமே என்ற பயம் அவர்கள் மனதில் இருந்தது. நிலையற்ற உலகத்தை விட நிலையான மறுமையை தேர்ந்தெடுத்தார்கள். எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும் அல்லாஹ்வின் உதவியின்றி எதையும் செய்ய முடியாது. எனவேதான் தங்களுக்கு உறுதியை வழங்குமாறு பிரார்த்தனையும் செய்தார்கள்.

    இதுதான் சூனியக்காரர்களாக வந்து இறை நம்பிக்கையாளர்களாக மாறியவர்களின் சம்பவம். இறைநம்பிக்கை மனதிற்கு சென்றால் என்னவெல்லாம் செய்யும் என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லித் தருகிறது. நமது இறை நம்பிக்கையை சற்று உரசிப் பார்ப்போமா?

    - ரியாஸ்

  • மேலும்....

  • மேலும்....

  • மேலும்....

  • சுதந்திரத்திர போராட்டத்திற்கு அள்ளிக் கொடுத்த முஸ்லிம்கள் 19-ஜூலை-2011

        கீழ்க்கோடி இந்தியரில் ஆயிரக்கணககான பேர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் தம்படிகூட இல்லாமல் ராணுவத்தில் குடும்ப சகிதமாகச் சேர்ந்து, தாய் நாட்டுக்காகப் பக்கிரிகளாக ஆனதை என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்.* - INA கேப்டன் ஷா

    நவாஸ்கான். ஸேவக் கி ஹிந்த்
    1943 ஜுலை 2 – ஆம் தேதி சிங்கப்பூரில் ‘ஆஸாத் ஹிந்த் சர்க்கார்’ (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்காலச் சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும்: ‘ஆசாத் ஹிந்த் பவுச்’ என்ற இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் உன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். கூடிஇருந்த அந்நகரத்து வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது,

        “தேசவிடுதலைக்காகப் போராடும் நம் இந்திய தேசிய ராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள்” – என்று வேண்டுகோள் விடுத்தார். வருகைதந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசி, “எங்கள் வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம்” என்று அறிவித்தனர்.

    இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி சற்று கோபத்துடன், தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் 10 சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்? நீங்கள் நிதி வழங்க பார்க்கின்றிர்களே ! – என்று பேச, கூட்டத்திலிரந்து தலையில் தொப்பி, தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார். வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?

        …இந்திய தேச பக்தர்கள் பலர் தங்களுடைய சொத்துக்களைச் சுதந்திர இந்திய அரசாங்கத்திற்கு அர்ப்பணம் செய்தனர். ஸ்ரீஹபீப், ஸ்ரீகன்னா முதலிய பிரமுகர்கள் சுதந்திரப் போருக்கு உதவியாக லட்சக்கணக்கான தொகையை வாரி வழங்கினர். சில நாட்களில் இந்திய தேசிய வங்கியில் 25 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிட்டது. -ஜெயமணி சுப்பிரமணியம்.*
        “ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்” – என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன.

    அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான முகம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக, இவர் தான் ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.**
    இவ்வாறு நேதாஜி படை நடத்துவதற்கான பொருளாதாரப் பிண்ணனியை உருவாக்கிக் கொடுத்தவர்களுள் பெரும்பாலோர் கீழை நாடுகளில் வாழ்ந்த முகம்மது ஹபீப் போன்ற முஸ்லிம் தனவந்தர்களாவர். (* ஜெயமணி சுப்பிரமணியம், நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம், பக்கம் 181) – (** கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பக்கம் 86.)
    நேதாஜியின் மாலைக்கு மூன்று லட்சம்
    பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா. எண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார்.
    பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்.
    1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.
    இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார்.
    23-01-1944 – இல் நேதாஜின் 47 – வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.*
     23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. – அமீர் ஹம்சா.
    தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்?
    (* அமீர் ஹம்சா, ‘நேதாஜியின் மாலைக்கு ரூ. 5 லட்சம்’ , தினமணி சுதந்திர பொன் விழா மலர்,பக்கம் 69.)

    மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர்
    தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 – ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.
        அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.
        லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
    காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.
    உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பட்டுள்ளார்.*
    அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது, “அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூ