இன்றைய செய்திகள்
சம்ஜோதா:டெட்டனேட்டர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது – சாட்சி வாக்குமூலம் - 22/02/2012


 

  Samjhauta,

புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் டெட்டனேட்டர் ஜார்கண்ட் மாநிலம் மிஹிஜாமில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தான் கண்டதாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தும்காவைச் சார்ந்த ரோஹித் ஜா என்பவர் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) யிடம் அளித்த வாக்குமூலத்தில், தேவேந்திர குப்தாவும், ராம்ஜி கல்சங்க்ராவும் இணைந்து ராஞ்சியில் இருந்து டெட்டனேட்டரை வாங்கியதாக கூறியுள்ளார். ஜாவின் வாக்குமூலத்தை என்.ஐ.ஏ பதிவுச்செய்துள்ளது.

தேவேந்தர் குப்தா அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். ராம்ஜி கல்சங்க்ராவை என்.ஐ.ஏ தேடி வருகிறது.

ரோஹித் ஜா அளித்த வாக்குமூலம்:

2003 டிசம்பர் மாதம் தும்காவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் முகாமில் வைத்து தேவேந்தர் குப்தாவை முதன்முறையாக கண்டேன். மிஹிஜாம் அலுவலகத்தில் ராம்ஜி கல்சங்க்ராவும், குப்தாவும் படுத்திருந்த கட்டிலுக்கு அடியில் பழைய நாளிதழ் பேப்பரில் பொதிந்த நிலையில் டெட்டனேட்டர் காணப்பட்டது. அதில் எலக்ட்ரிக் வயர் மூலம் கனெக்‌ஷன் கொடுக்கப்பட்டிருந்தது.

“நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்” என்று குப்தாவிடம் வினவியபொழுது, அவர் புன்னகைக்க மட்டுமே செய்தார். ராஞ்சியில் மனோஜ் என்பவரை சந்தித்துவிட்டு இருவரும் வந்தது எனக்கு பின்னர் புரிந்தது. மனோஜ் ராஞ்சியில் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆவார்.

நான் கட்டிலுக்கு அடியில் டெட்டனேட்டரை பார்த்ததும், குப்தா அதனை ஒரு பையில் திணித்து அலுவலகத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் கொண்டு வைத்தார். அமித் சவுகானும், ராஜேந்திர பஹல்வானும் என்னுடன் வசித்து வந்தனர். (இருவரையும் என்.ஐ.ஏ தேடிவருகிறது)அங்கு வைத்து அமித் சவுகான் வெடிக்குண்டில் நிரப்புவதற்கு சைக்கிளில் உபயோகிக்கும் பெல்லட்ஸ்(குறுணைகள்)வாங்கினார். இவற்றை வாங்க செல்லும்போது என்னை உடன் அழைத்துச் செல்லவில்லை. அமீத் சவுகானின் வசம் இருபது அல்லது இருபத்தி ஐயாயிரம் ரூபாய் இருந்தது. செலவுகளை அவர் கவனித்துக்கொண்டார். அத்துடன் தான்பாதில் ஒரு மஸ்ஜிதுக்கும் அமீத் சவுகான் சென்றார். அங்கிருந்து சில உருது மொழியிலான புத்தகங்களையும், காலண்டர்களையும் வாங்கிக்கொண்டார்.

2008 அக்டோபர் மாதம் பிரக்யாசிங் தாக்கூரும் இதர நபர்களும் கைதானதை தொடர்ந்து நான் குப்தாவிடமிருந்து பிரிந்துவிட்டேன். இவ்வாறு ரோஹித் ஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.

அமீத் சவுகானை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு என்.ஐ.ஏ 2 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸில் இருந்து கண்டெடுத்த டெட்டனேட்டரின் ஃபோட்டோவை காண்பித்த பொழுது, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இதே போன்றதொரு டெட்டனேட்டரை கண்டதாக ஜா கூறினார்.

அத்னானின் உறுதிக்கு முன்னால் இஸ்ரேல் மண்டியிட்டது - 22/02/2012


  Khader Adnan’s

டெல்அவீவ்:அரசு நிர்வாக சிறை (administrative detention) என்ற கருப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை இல்லாமல் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

அத்னான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டால் வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி குற்றம் சுமத்தாமல் அவரை விடுதலைச் செய்வதாக இஸ்ரேலிய நீதி அமைச்சகம் உறுதியளித்தது. இதனை அத்னானின் வழக்கறிஞர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

33 வயதான அத்னான் இஸ்ரேலிய ராணுவத்தால் அநியாயமாக கைது செய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். நாட்கள் செல்ல அத்னானின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரது உயிருக்கு கூட ஆபத்து நேரும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். தனது மகளே தன்னை அடையாளம் காணமுடியாத அளவுக்கு அவரது உடல் நிலை மோசமடைந்தது.

இந்நிலையில் உலகின் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் அவருடைய விடுதலைக்காக குரல் எழுப்பினர். ஃபலஸ்தீனில் அத்னானின் விடுதலையை கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அத்னானின் விடுதலை தொடர்பான மனு இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அத்னானின் விடுதலை குறித்து அறிவிப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இம்மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி தென்னூர் எவர்கிரீன் துவக்கப்பள்ளியில் மாநிலத்தலைவர் முஹம்மது ஷாஃபி தலைமையில் நடைபெற்றது - 21/02/2012


 








“ மாணவ சமூகமே புறப்படு! புதிய சரித்திரம் படைத்திடு!! ” என்ற முழக்கத்துடன் சரியாக பகல் 02:30 மணியளவில் மாநில பிரதிநிதிகள் மாநாடு இனிதே துவங்கியது. மாநில செயலாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா முஹம்மது அவர்கள் வரவேற்புரையாற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். பின்னர் மாநில பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2012-2013 ஆண்டிற்கான புதிய மாநில நிர்வாகிகளை தேசிய செயலாளர் மெஹஃபூஸ் அறிவித்தார்.

மாநில தலைவர்:  முகம்மது தம்பி (அதிராம்பட்டினம்)

மாநில துணைத் தலைவர்: சாகுல் சஹீத்   (ராம்னாடு)

மாநில பொதுச் செயலாளர்: சத்தார் (திருச்சி)

மாநில செயலாளர்: அரபாத் (திருநெல்வேலி)

மாநில பொருளாளர்:முஹைதீன் (தஞ்சை)

மாநில செயற்குழு உறுப்பினர்கள்:

1.    ராஜா முஹம்மது (மதுரை) 

2.    ஜமிஷா (மேட்டுப்பாளையம்)

3.    அப்துல்லாஹ் (சென்னை)

4.    பக்ருதீன் (மதுரை)

5.    ஹனீப் (கோவை)

6.    அப்துர் ரஹ்மான் (காயல்பட்டினம்)

 புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில தலைவர் முகம்மது தம்பி அவர்கள் மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினராக திருச்சி M.I.E.T. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர் P.M.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு வலிமையான எதிர்கால இந்தியாவை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் மாணவ சமூகத்தையே சாரும் என உரையற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI - ன் தமிழக மாநில பொது செயலாளர் ரஃபீக் அஹமத், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில செயலாளர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் கர்நாடகா மாநில செயலாளர் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, கீழ்கண்ட மாநாட்டுத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்ட தலைவர் ஃபக்ருதீன் அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் காலாண்டு இதழான 'கேம்பஸ் டுடே' யை கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தேசிய செயலாளர் மெஹஃபுஸ் வெளியிட்டார்.


தீர்மானங்கள்

1.    இன்றைய கல்வி நிறுவனங்கள் சேவை மனப்பான்மையிலிருந்து விலகி, கொள்ளை லாபம் ஈட்டும் வியாபார நிறுவனங்களக  மாறி இருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு, உயர்கல்வி வரை இலவசமாக வழங்க கோரியும், கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கை முன்பதிவு மற்றும் கல்விக் கொள்ளையினை தடுத்து நிறுத்தும்படியான சட்டம் இயற்றுவதோடு, அனைத்து அரசு கல்வி நிறுவனங்களின் தரத்தினை உயர்த்த வேண்டும் எனவும் இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.

 2.    நம் சமூகத்தின் நாளைய தலைவர்களான மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை கருத்தில் கொண்டு அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, கல்வி வளாகங்களில் 100 மீட்டருக்கு உட்பட்டு இருக்கும் மது மற்றும் புகையிலை விற்பதற்கான தடையை 500 மீட்டராக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்துகிறது.

 3.   கல்வி வளாகங்களில் கட்டுப்பாடு எனும் பெயரில் மாணவர்களுக்கு மத்தியில் அவர்களது மத சுதந்திரத்தை பறிப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் அரசை வலியுறுத்துகிறது.

 4.    பள்ளி, கல்லுரிகளில் மாணவியர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளும், மன உளைச்சலால் பெருகிவரும் மரணங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.

 5. சமூகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை களையும்விதமாக அனைத்து சமூக மக்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் தகுந்த இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கையின் பரிந்துறைப் படி சிறுபான்மையினருக்கான 15% இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.

 6.    பள்ளி, கல்லூரிகளின் துவக்க மற்றும் நிறைவு நேரங்களில் பேருந்தின் கூட்ட நெரிசலால் படிகளில் செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாவதை அரசு கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கென இலவச மற்றும் மாணவ தனி பேருந்தினை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறது.

 7.    மாணவர்களுக்கு இடையே ஒற்றுமை, சமூக மற்றும் தெளிந்த அரசியல் சிந்தனையை உருவாக்கிட கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடத்துவதன் மூலம், கல்லூரி வளாங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அரசினை வலியுறுத்துகிறது.

 8.    பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதித் தேர்வுகள் நெருங்கும் வேளையில், அறிவிக்கப்பட்ட 8 மணி நேர மின்வெட்டும், திடீர் மின்வெட்டுக்களும் மிகுந்த சிரமத்தை ஏற்ப்டுத்துகிறது. இந்நிலையை களைய விரைவு நடவடிக்கைகள் வேண்டுமெனவும், குறந்தபட்சமாக, இறுதித் தேர்வுகள் முடியும் வரை முற்றிலும் மின்வெட்டுக்கள் நீக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்வதோடு, அமல்படுத்த இருக்கும் மின் கட்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு அரசினை வலியுறுத்துகிறது.

 9.    உயிருக்கு உலைவைக்கும் அணுஉலைகளை உலகின் பல்வேறு நாடுகள் மூடிவரும் நிலையில், மின் உற்பத்திக்கு நம் தேசத்தில் பல்வேறு வழிமுறைகள் இருந்தும் அதனை விரிவுபடுத்தாமல், திறக்க இருக்கும் கூடங்குளம் அணுஉலையை மக்கள் நலன் கருதி நிரந்தரமாக மூடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 10.                        அத்துமீறும் அதிகாரமளிக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம், மனித உரிமைகளுக்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற மனித உரிமைகளை மாய்க்கும், ஜனநாயகத்திற்கெதிரான கறுப்புச் சட்டங்கள் திரும்பப்பெற வேண்டுமெனவும், தீவிரவாத முத்திரை குத்துப்பட்டு போலி எண்கவுண்டருக்கு உள்ளாக்கப்படும் அவலங்களும் மாய்க்கப்பட்டு, குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியிறுத்துகிறது.

 11.                        உலகின் கள்ள நாடும், எல்லை ஆக்கிரமிப்பு  நாடுமான இஸ்ரேல், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தினையும், குண்டு வெடிப்பு கலாச்சாரத்தினையும், விதைத்துவரும்  நிலையில் இஸ்ரேலுடனான இந்திய இராஜ்ஜிய உறவுகள் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசினை வலியுறுத்துகிறது.

 12.   அரசு  மற்றும்  அரசு  உதவி பெறும் கல்வி  நிறுவனங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதியின்மையால் அதில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலையும் பாதுகாப்பு நிலையும் அபாயகர நிலையில் உள்ளது. மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும் திருச்சி தென்னூர் குத்பிஷா நகரில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற அளவிற்கு பள்ளியின் கூரை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளது. பள்ளியின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு சமூக விரோதிகள் இரவு நேரங்களில் பயன்படுத்தும் சட்ட விரோத கூடாரமாக மாறிவருகிறதுஎனவே மேற்கண்ட பள்ளிக் கூடம் உட்பட அனைத்து பள்ளிக்கூடம் மீதும் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுத்து உள்கட்டமைப்புகளை குறுகிய காலத்தில் சீரமைக்க வேண்டுமென கேட்டுகொள்கிறது.

 13.  கேம்பஸ் ஃப்ரண்டின் நடப்பாண்டிற்கான வளர்ச்சி நிதியை அளித்து, பணிகள் மேம்பட உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இம்மாநாட்டின் மூலம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

சென்னையில் பைப் வெடிக்குண்டுகள் பறிமுதல்: ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் சதியா? - 17/02/2012


  பைப் வெடிக்குண்டுகள்

சென்னை:சென்னை அருகே செங்குன்றத்தையடுத்துள்ள எடப்பாளையத்தில் உள்ள ஒரு கிணற்றில் 5 பைப் வெடிகுண்டுகள் கைபற்றப்பட்டன. இதையடுத்து கிணற்றின் உரிமையாளர் கோயில்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்டது எடப்பாளையம். அங்குள்ள பசும்பொன் நகரில் கோயில்ராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சக்திவாயந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக சோழாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட கிணற்றுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கிணற்றில் 5 பைப் வெடிகுண்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர்.

இதுகுறித்து கிணற்றின் உரிமையாளர் கோயில் ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிணற்றுக்குள் இருந்து சக்திவாய்ந்த பைப் வெடிக்குண்டுகள் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பா.ஜ.க தலைவர் அத்வானி ஜனசேதனா யாத்திரை செல்லும் வழியில் பைப் குண்டு கைப்பற்றப்பட்டது. அப்பாவி முஸ்லிம்களின் பழியை போட்டு போலீசார் கைது செய்தனர். ஆனால், தற்பொழுது கோயில்ராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து பைப் வெடிக்குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை போலீஸார் முஸ்லிம்கள் மீது பழி போடுவார்களா?அல்லது வழக்கை மூடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கலவரத்தை தூண்ட சங்க்பரிவார தீவிரவாதிகள் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். அண்மையில் சில சம்பவங்களில் சங்க்பரிவார தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏதேனும் நாசவேலைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மீது பழியை போட பைப் வெடிக்குண்டுகளை சங்க்பரிவார ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பதுக்கி வைத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தவேண்டும். முன்னர் தென்காசியில் நடந்த அனுபவத்தை போலீசார் மறந்து இருக்கமாட்டார்கள்.

எஸ்.டி.பி.ஐ பேரணியில் போலீஸ் அராஜகம் – தடியடி, கைது - 17/02/2012


  sdpi march police lathicharg​e

திருவனந்தபுரம்:சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்திய தேசத்துரோக வழக்கை வாபஸ்பெறக் கோரி எஸ்.டி.பி.ஐ நடத்திய தலைமைச் செயலகத்தை நோக்கிய பேரணியில் போலீஸ் அராஜகம்.

எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தடியடியில் ஏராளமான உறுப்பினர்களுக்கும், போலீசாருக்கும் காயமேற்பட்டது. இன்று காலை 12.20 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் இருந்து பேரணி துவங்கியது. துவக்க உரைக்கு பின்னர் சிறிய அளவில் போலீசாருக்கும், எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் இடையே தள்ளு. முள்ளு நிகழ்ந்தது. இதனைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாத சூழலில் போலீசார் திடீரென தடியடி நடத்த துவங்கினர். பின்னர் தண்ணீரை பீச்சி, கண்ணீர் புகையை பிரயோகித்தனர். பேரணியில் இருந்து கலைந்து சென்ற எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்களை தேடிப்பிடித்து தாக்கிய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு - 17/02/2012


 

ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு

மும்பை:டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தின் கார் தீப்பற்றி வெடித்த சம்பவம் ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலைச் செய்யப்பட்ட பாணியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் தேதி டெஹ்ரானில் ஈரானின் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் டெல்லியில் நடந்த தாக்குதலுக்கு சமமான ஆபரேசன் மூலமாக கொலைச் செய்யப்பட்டார்.

அணுவிஞ்ஞானி பயணித்த காரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரண்டுபேர் காந்த குண்டை(அல்லது ஒட்டுக்குண்டு) காருக்கு பின்புறம் இணைத்துவிட்டு தப்பிவிட்டனர். பின்னர் குண்டுவெடித்து விஞ்ஞானி கொல்லப்பட்டார். இதே பாணியில்தான் டெல்லியிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக தீவிரமான பயிற்சியை பெற்றவர்கள்தாம் இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக புலனாய்வு ஏஜன்சிகள் கூறுகின்றன.

ஈரானில் விஞ்ஞானிகளின் கொலைக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளது அந்நாட்டின் தீவிரவாத அமைப்பான பீப்பிள்ஸ் முஜாஹிதீன் ஆஃப் ஈரான் என்று ஈரானும், அமெரிக்க ஏஜன்சி வட்டாரங்களும் கூறுகின்றன. இந்த அமைப்பிற்கு பயிற்சி மற்றும் உதவி அளிப்பது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

டெல்லி குண்டுவெடிப்பிலும், ஜார்ஜியா திப்லிஸில் இஸ்ரேல் தூதரகத்தின் காரில் குண்டுவைத்த சம்பவத்திலும் மொஸாதின் கரங்கள் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.

‘எங்களுக்கு எதிராக போருக்கான வழியை திறப்பதற்கான வேகத்தை அதிகரிக்கிறது இஸ்ரேல்’ என்று ஈரான் குற்றம் சாட்டுகிறது. ஈரானின் குற்றச்சாட்டுக்கு காரணம், மொஸாதின் தலைவர் தாமிர் பர்டோவுக்கும், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏவின் தலைவர் டேவிட் பெட்ராஸுக்கும் இடையே நடந்த ரகசிய சந்திப்பாகும்.

இம்மாதம் துவக்கத்தில் மொஸாத் தலைவர் வாஷிங்டனுக்கு ரகசியமாக சென்றார். சி.ஐ.ஏ உடன் நடந்த சந்திப்பின் நோக்கம் குறித்து அமெரிக்க பத்திரிகைகளான நியூஸ் வீக்கும், தி டெய்லி டெலிக்ராஃபும் சில தகவல்களை வெளியிட்டுள்ளன.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து ஆராய்வதற்காக மொஸாத் தலைவர் வாஷிங்டனுக்கு வருகை தந்தார். இஸ்ரேல் ஈரானின் மீது தாக்குதலை துவக்கினால், அமெரிக்காவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆராயவே மொஸாத் தலைவரின் சுற்றுப்பயண நோக்கம் என்று டெய்லி டெலிக்ராஃப் பத்திரிகை கூறுகிறது.

மொஸாத் தலைவருடன் சந்திப்பை நடத்தியது குறித்து சி.ஐ.ஏ தலைவர் டேவிட் பெட்ராஸ் அமெரிக்க செனட்டிடம் தெரிவித்துள்ளதாக நியூஸ் வீக் கூறுகிறது.

‘ஈரானுடன் ஒபாமாவின் ஆபத்தான விளையாட்டு’ (Obama’s Dangerous Game With Iran) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை நியூஸ் வீக் பத்திரிகை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லி மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களின் மீது மொஸாதின் ஏஜண்டுகள் அல்லது அவர்களின் கூலிப் படையினர் மூலம் தாக்குதலை நடத்தி அதன் பழியை ஈரானின் மீது சுமத்தி அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. மேலும் ஈரானின் மீது உலக நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம். இவ்வாறு ஒரே கல்லில் பல மாங்காய்க்களை கொய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் - 15/02/2012


அஹ்மதாபாத்:2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காத மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இனப்படுகொலைகள் நடந்த வேளையில் கடைகள் அழிக்கப்பட்ட 56 பேருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கடந்த ஆண்டு நீதிமன்றம் மோடி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை நீதிமன்றத்தின் உத்தரவை மோடியின் அரசு நிறைவேற்றவில்லை. இதனை சுட்டிக்காட்டியுள்ளது நீதிமன்றம்.

குஜராத் இனப்படுகொலை வேளையில் சேதப்படுத்தப்பட்ட 600 க்கும் அதிகமான மத நிறுவனங்களுக்கு அவற்றை புனரமைக்க நிதி வழங்கவேண்டும் என்று நேற்று முன்தினம் நீதிமன்றம் மோடி அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன் இஸ்லாத்தை தழுவினார்! - 15/02/2012


 

Stone, son of Oscar-winning director Oliver Stone

டெஹ்ரான்:பிரபல இயக்குநரும், உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதை பெற்றவருமான ஆலிவர் ஸ்டோனின் மகன் ஸீன் ஸ்டோன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஈரானின் நகரமான இஸ்பஹானில் வைத்து ஸீன் இஸ்லாத்தில் நுழைவதற்கான வார்த்தைகளை(ஷஹாதா கலிமா) கூறி தன்னை முஸ்லிமாக மாற்றிக்கொண்டார். ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ஸீன் தனது பெயரின் துவக்கத்தில் ‘அலி’ என்ற வார்த்தையை(இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவின் பெயர்) இணைத்துக் கொண்டார்.

ஸீன் தனது தந்தை ஆலிவர் ஸ்டோன் இயக்கிய திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். ஸீனின் தந்தையான ஆலிவர் ஸ்டோன் ஒரு யூதர் ஆவார். அவரது தாயார் கிறிஸ்தவர். ஸீன் தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை கூறவில்லை.

ஸீன் தந்தை ஆலிவர் ஸ்டோன் 1980 களிலும், 1990 துவக்கத்திலும் தொடர்ந்து வியட்நாம் போர் தொடர்பான திரைப்படங்களை இயக்கியுள்ளார். 3 அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஸீன் ஈரானுக்கு உறுதியான ஆதரவாளர். டொராண்டோ ஃபிலிம் பெஸ்டிவலில் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கான உரிமையை ஆதரித்து பேசினார். இஸ்ரேலின் அச்சுறுத்தலை முறியடிக்க அணுசக்தி தேவை என ஸீன் குறிப்பிட்டார்.

கைதிகளின் மன அழுத்தத்தை போக்க மனநல நிபுணர்களை சிறையில் நியமிக்க உத்தரவு - 14/02/2012


 

10ம் வகுப்பு மாதிரி வினா விடை சிடி அனைத்து பள்ளிகளுக்கும் சப்ளை - 14/02/2012


 

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடி​ப்பு: 4 பேர் காயம் - 14/02/2012


 

The blast in New Delhi

புதுடெல்லி:டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் குண்டுவெடித்தது. இதில் தூதரக பணியாளர்கள் உள்பட நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மதியம் 3.15 மணியளவில் டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே காரில் குண்டுவெடித்தது. கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், பின்னர் விபத்து நடந்த இடத்தில் கிடைத்த வெடிப்பொருட்களின் சிதறல்கள்களை கண்டுபிடித்துள்ளதாக போலீசாரும், தூதரக வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

குண்டுவெடிப்பில் கார் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங்கின் இல்லம் 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

இதனிடையே, ஜார்ஜியாவிலும் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வைக்கப்பட்டிருந்தது. அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர்.

குண்டுவெடிப்பு வழக்கு:ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சவுகானின் கைது திருப்புமுனையாகும் - 14/02/2012


Samjhauta_bomber_Kamal_Chouhan

புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த கமால் சவுகானை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்திருப்பது இவ்வழக்கில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான சவுகானை நேற்று முன்தினம் இந்தூரில் வைத்து என்.ஐ.ஏ கைது செய்தது.

குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வரும் தலைமறைவு ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா ஆகியோரை கைது செய்ய சவுகானின் கைது உதவும் என கருதப்படுகிறது.

சுனில் ஜோஷி கொலை வழக்கிலும் சவுகானிடமிருந்து தகவல் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. 2007 பிப்ரவரி 28-ஆம் தேதி 68 பேர் பலியான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ரெயில் பெட்டியில் குண்டை நிறுவியவர்களில் சவுகானும் ஒருவர் என என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது. நேற்று க்ரேட்டர் நொய்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுகான் ஒரு நாள் ரிமாண்ட் செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சவுகான் ஆஜர்படுத்தப்படுவார்.

சுனில் ஜோஷி வழக்கு தொடர்பாக முதலில் என்.ஐ.ஏ சவுகானிடம் விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இதர ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோருடன் சவுகானுக்கு இருந்த தொடர்பு கண்டுபிடித்ததை தொடர்ந்து இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக கூறி சவுகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சவுகான் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதை தொடர்ந்து அவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. இதர 3 நபர்களுடன் சேர்ந்து சவுகான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டை வைத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான வன்வாசி கல்யாண் ஆசிரமத்தின் குஜராத் பிரிவு தலைவர் நாபாகுமார் சர்க்கார் என்பவரிடம் தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்தியதில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சதித்திட்டம் குறித்து கூடுதல் விபரங்கள் கிடைத்தன. குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அனைவரும் நெடுங்காலமாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் என என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனப் படுகொலையை போல இந்தியா முழுவதும் நடத்துவதுதான் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கொள்கை என்றும், அதற்கு சாத்தியமில்லாத சூழல் நிலவியதால் அதிருப்தியடைந்தவர்கள் குண்டுவெடிப்பை நிகழ்த்த துவங்கினார்கள் என்றும் என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் சோலங்கி தாங்க் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. சோலங்கி அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் சுனில் ஜோஷி கொலை வழக்கில் முக்கிய பங்கு வகித்த 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் சவுகானும் ஒருவர் என்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சி கூறுகிறது.

மோடி அரசும், எஸ்.ஐ.டியும் ஆதாரங்களை அழித்துவிட்டனர்: சஞ்சீவ் பட் குற்றச்சாட்டு - 12/02/2012


சஞ்சீவ் பட்

அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை குஜராத் மாநில அரசும், சிறப்பு விசாரணைக்குழுவும் சேர்ந்து அழித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் இனப்படுகொலை தொடர்பாக விசாரிக்கும் நானாவதி கமிஷனுக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் பட் மேலும் கூறியிருப்பது: 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான முக்கிய ஆதாரங்களை மோடி தலைமையிலான மாநில அரசும், கலவரத்தை விசாரிக்க மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவும் அழித்துவிட்டன.

அதிகாரத்தில் உள்ள நபர்கள், சட்டத்துக்கு முன் விசாரணைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் மோசமான இந்த காரியத்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மாநில நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். முக்கிய ஆவணங்களை சமர்ப்பிப்பதில் கமிஷனின் தரப்பில் உருவான காலதாமதம் முதல்வர் மோடிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எதிரான ஆவணங்களை அழிக்க வசதியை ஏற்படுத்தி கொடுத்தது.

முக்கிய ஆவணங்களை குழுநல அக்கறை கொண்டவர்கள்(vested interests) அழிக்கவில்லை என்பது குறித்து உறுதிச்செய்ய வேண்டும் என தனது கடிதத்தில் சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தவேண்டும் – அமிக்கஸ் க்யூரி - 12/02/2012


amicus-curiae

புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தவேண்டும் என அமிக்கஸ் க்யூரி(நீதிமன்றத்திற்கு உதவும் வழக்குரைஞர்) பரிந்துரைச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் அமிக்கஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் நரேந்திர மோடியை விசாரணைச் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் வாதங்களை நிராகரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் நடவடிக்கை பொருத்தமில்லாதது என அமிக்கஸ் க்யூரி கூறியிருப்பதாக டெஹல்கா கூறுகிறது.

ஹிந்துக்களின் கோபத்தை தணிக்க அனுமதிக்க வேண்டும் என இனப் படுகொலைகள் நடப்பதற்கு முந்தைய தினம் அழைக்கப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்தார் என்று சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார் மோடி. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இனப்படுகொலையில் மோடியின் பங்கிற்கு ஆதாரம் இல்லை என ஆரம்ப கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

குஜராத் அரசும், சிறப்பு புலனாய்வு குழுவும் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டதாக சஞ்சீவ் பட் நானாவதி கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஏமாற்றுகின்றன – ராகுல் காந்தி - 12/02/2012


Rahul Gandhi said if people want a change for good in UP, they should vote for Congress

சோரான்(உ.பி):முஸ்லிம்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஏமாற்றி வருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி சோரன் பகுதியில் சனிக்கிழமை நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார்.அப்பொழுது அவர் கூறியது:

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்டோரும் இன்றும் மிக மோசமான நிலையில் இருப்பதற்கு இப்போதைய மாயாவதி அரசும், முந்தைய சமாஜ்வாதி, பாஜக அரசுகளும்தான் காரணம். அனைத்துக் கட்சியினரும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதாகப் பேசி வருகின்றனர். இங்கு சுமார் 70 மாவட்டங்கள் உள்ளன. இதில் எத்தனை மாவட்ட நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் நீதிபதியாக உள்ளனர். எத்தனை மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக தாழ்த்தப்பட்டோர் உள்ளனர் என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

நான் செல்லும் இடங்களில் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களும், ஏழைகளும் என்னிடம் கேட்கும் பொதுவான கேள்வி ஒன்று உள்ளது. நாங்கள் பல தலைமுறையாக கடுமையாக உழைத்தும் எங்கள் வாழ்க்கையில் நிம்மதியில்லை. வறுமையில் இருந்தும், கடனில் இருந்தும் மீள முடியவே இல்லையே அது ஏன்? என்பதுதான் அந்த கேள்வி.

இங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த 3 கட்சிகளுமே உங்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் அதற்குக் காரணம். ஒரு குறிப்பிட்ட 10 சதவீத மக்களின் நலனில்தான் அவர்கள் அக்கறை செலுத்தினர். தாங்களின் வாக்கு வங்கிகள் என்று கருதும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, பாஜக ஆகிய கட்சிகள் நன்மை செய்துள்ளன.

பொதுமக்களாகிய உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். மற்ற கட்சிகளைப் போல போலியான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. உங்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு வந்துள்ளேன். நான் கல்லூரியிலும், வெளிநாடுகளிலும் சென்று கற்றதைவிட, ஏழைகளின் வீடுகளில் சென்று தங்கியபோதும், அவர்களிடம் பேசியபோதும் நிறைய தெரிந்துகொண்டேன்.

உத்தரப் பிரதேச மக்களின் உழைப்புதான் டெல்லி மெட்ரோ ரயிலை உருவாக்கியது. பல அண்டை மாநிலங்களில் பெரிய கட்டடங்களும், சாலைகளையும் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது நீங்கள்தான். ஆனால் உங்களுக்கு வசிக்க நல்ல வீடு இல்லை. இதனை மாற்றத்தான் காங்கிரஸ் உள்ளது.

இங்குள்ள மாயாவதி அரசு கட்டுமான நிறுவன உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. ஏழைகளின் நிலங்களை அவர்கள் அபகரித்தனர். எதிர்த்துப் போராடியவர்களை தடியால் அடித்து விரட்டினர். மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்கள் அனைத்தையும் குறை கூறுகின்றனர். மக்களை ஏமாளிகள் என்று நினைத்துத்தான் அவர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர். மாநிலத்தில் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப் போவதாக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். அவர் 3 முறை இங்கு முதல்வராக இருந்தார். அப்போது ஒரு மின் திட்டத்தைக் கூட கொண்டு வரவில்லை.

காங்கிரஸ் இங்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி பெரும் என்பதைப் பற்றி நான் அக்கறை செலுத்தவில்லை. உங்கள் வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினரும் உங்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரப் போராடுவார் என்று உறுதியளிக்கிறேன்.இவ்வாறு ராகுல் உரையாற்றினார்.

சங்கரன்கோவில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தகுந்த இழப்பீடு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை - 12/02/2012


 

அஜ்மீர் குண்டுவெடிப்பு:சுரேஷ் நாயர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு - 11/02/2012


புதுடெல்லி:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் ஹிந்துத்துவா தீவிரவாதி கேரளாவைச் சார்ந்த சுரேஷ் நாயரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜன்சி அறிவித்துள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், மொடாஸா குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமறைவாக இருந்து வரும் இதர நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கும் என்.ஐ.ஏ பரிசு அறிவித்துள்ளது.

சுரேஷ் நாயரின் புகைப்படமும், குஜராத் முகவரியும் இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவு ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா என்ற ராமச்சந்திரா, அமித் என்ற அசோக், மேஹுல் என்ற மஹேஷ் பாய், சுரேஷ் நாயர் ஆகியோர் குறித்து தகவல் அளித்தால் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. இவர்களில் சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் அளித்தால் 5 லட்சம் ரூபாய் வீதம் பரிசு அளிப்பதாக என்.ஐ.ஏ ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்பொழுது பரிசுத்தொகை 10 லட்சம் ரூபாய் வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2007 அக்டோபர் 11-ஆம் தேதி அஜ்மீரில்  நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். கொலைச் செய்யப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்குமான சுனில் ஜோஷியிடம் இருந்து 2007 அக்டோபர் 10-ஆம் தேதி வெடிக்குண்டை வாங்கி அஜ்மீருக்கு கொண்டு வந்து தர்காவிற்குள் வைத்தது சுரேஷ் நாயர், மேஹுல், பாவேஷ் பட்டேல் ஆகியோர் என என்.ஐ.ஏவும், ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும் கண்டுபிடித்தன. குண்டுவெடிப்புகளின் ரகசியம் வெளியே கசியாமல் இருக்க சுனில் ஜோஷியை கொலைச்செய்த வழக்கிலும் மேஹுல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குஜராத்தில் வசித்துவந்த சுரேஷ் போலீஸ் விசாரணையை துவங்கிய பிறகு தலைமறைவாகிவிட்டார். சுரேஷ் நாயர் உள்பட 5 ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிக்க விரும்புபவர்கள் ஹைதராபாத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலோ அல்லது டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ தலைமையகத்திலோ தகவலை அளிக்கலாம் என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.

கீழ்கண்ட மொபைல் எண்களில் தகவல் அளிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்

பள்ளிக்கூடத்தில் மாணவன் வெறி: ஆசிரியை படுகொலை - 10/02/2012


CAFKEQUV

சென்னை:சென்னை பாரிமுனை பள்ளிக்கூட ஆசிரியை ஒருவரை மாணவன் பள்ளிக்கூடத்தில் வைத்து கத்தியால் குத்தி கொலைச் செய்துள்ளான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனை அரண்மனைக்கார தெருவில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 150 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆயிரத்து 500 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.  இப்பள்ளியில் சென்னை ஏழுகிணறு பகுதியை சார்ந்த மாணவன் ஒருவன் 9-வது வகுப்பு பயின்று வருகிறான்.

வேதியியல் மற்றும் இந்தி பாடம் எடுக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி (39). மந்தைவெளியை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் பாடம் எடுத்து விட்டு 3 வது பாடவேளையின் போது மாற்று வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். இந்நேரத்தில் மாணவன் ஆசிரியை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான். கையில் இருந்த கத்தியால் குத்தினான். இதில் 7 இடங்களில் குத்து விழுந்தது. மாணவன் கத்தியால் குத்தியதால் அதிர்ச்சியால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். மாணவர்கள் அக்கம் பக்கம் ஓட துவங்கினர். கொலை செய்த மாணவன் எங்கும் ஓடாமல் வகுப்பறைக்குள்ளேயே இருந்தான். பள்ளி நிர்வாத்தினர் ஆசிரியை உமாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இந்த சம்பவம் பள்ளியை சுற்றிஉள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு காரணம் பள்ளியில் நடத்தைக் குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியது மாணவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில்தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இந்நிலையில் தமிழகத்தில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்த எதிர்கட்சிகள் கோரிக்கை - 09/02/2012


பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் சட்டப் பேரவையை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்த எதிர்கட்சிகளான காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜை சந்தித்து இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சட்டசபை எதிர்கட்சி தலைவர் சித்தாராமைய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசியல் சாசன சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதில் பா.ஜ.க அரசு தோல்வியை தழுவிய சூழலில் 356-வது பிரிவின் படி பா.ஜ.க அரசை கலைக்கவேண்டும். அத்துடன் சட்டப் பேரவையையும் கலைக்கவேண்டும் என அவர் கூறினார்.

பா.ஜ.கவின் மூன்று அமைச்சர்கள் சட்டப்பேரவையில் நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் மொபைலில் ஆபாச படம் பார்த்த சூழலில் இக்கோரிக்கையை எதிர்கட்சியினர் விடுத்துள்ளனர். எல்லா துறைகளிலும் பா.ஜ.க அரசு தோல்வியை தழுவியுள்ளதாக சித்தாராமைய்யா கூறினார்.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சி விலை குறைந்த அரசியல் விளையாட்டை ஆடுவதாக முதல்வர் சதானந்தா கவுடா பதில் அளித்துள்ளார்.

அடிப்படை இல்லாத காரணம் மூலம் அரசை பாதுகாக்க 16 எம்.எல்.ஏக்களின் பதவியை 2010 ஆம் ஆண்டு சபாநாயகர் போபய்யா தகுதியிழக்கச் செய்தார் என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான என்.சி.நானா கூறினார். இதற்கிடையே, எதிர்கட்சியினரின் அமளியை தொடர்ந்து கர்நாடகா சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இனப்படுகொலை:எஸ்.ஐ.டி அறிக்கையின் நகலை கேட்டு ஸாக்கியா ஜாஃப்ரி உள்பட 3 பேர் மனு தாக்கல் - 09/02/2012


SIT_Finds_No_Ev14183

அஹ்மதாபாத்:ஸாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில் சிறப்பு புலனாய்குழு(எஸ்.ஐ.டி) அறிக்கையின் நகல்களை கோரி ஸாக்கியா ஜாஃப்ரி, சமூக ஆர்வலர்களான டீஸ்டா ஸெடல்வாட், முகுல் சின்ஹா ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் இனப் படுகொலையின் போது கொடூரமாக கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி. தனது கணவரின் உயிரைக் காக்கத் தவறியதாக முதல்வர் நரேந்திர மோடி, மூத்த அரசியல்வாதிகள் 62 பேர் மற்றும் போலீஸார் மீது குற்றம் சுமத்தியிருந்தார். இதுகுறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், ஸாக்கியா ஜாஃப்ரி. இவரது புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கும்படி 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடியிடம் இருமுறை விசாரணை நடத்தியது. அதனடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், மோடி மீது குற்றம் சுமத்தப்படுமளவுக்கு ஆதாரம் ஏதுமில்லை என்று தெரிவித்தது. இதன் பின்னர் இந்தப் பிரச்னை குறித்து விசாரிக்க ‘நீதிமன்றத்தின் நண்பராக (அமிகஸ்க்யூரி)’ ராஜு ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் அளித்த அறிக்கை, சிறப்புப் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு விஷயங்களிலிருந்து வேறுபட்டு இருந்தது. இதன் பின்னரே  ஸாக்கியா ஜாஃப்ரியின் மனு குறித்து விசாரிக்கும்படி குஜராத் விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் அறிக்கையை பிப்ரவரி 8-ம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் மோடி மீது குற்றம் ஏதும் சுமத்தப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தாலும், அதிகாரபூர்வமாக தகவல்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்த அறிக்கையின் நகலை தனக்கு அளிக்கும்படி ஸாக்கியா ஜாஃப்ரி வியாழக்கிழமை விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடைபெற்றுள்ளதா என்றும், அறிக்கையின் முடிவு இறுதியானதுதானா என்றும் கேட்டிருந்தார்.

இந்த மனு மீது பிப்ரவரி 13-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ஸாக்கியா ஜாஃப்ரி, பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளின்படி மோடி மீது குற்றச்சாட்டு ஏதும் சுமத்தப்படவில்லை எனில், அது தனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

சிறப்புப் புலனாய்வு அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஜாஃப்ரியின் மகன் தன்வீர் ஜாஃப்ரி, விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதே மிகப் பெரிய வெற்றி என்று குறிப்பிட்டார். மேலும் விசாரணை அதிகாரியே நீதிபதியாக செயல்பட்டால் தாங்கள் எதற்கு நீதிமன்றத்தை நாடவேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.

உ.பி:வாக்குப்பதிவு 62 சதவீதம் - 09/02/2012


imagesCAJAH0W8

லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்கட்டமாக நடந்த 55 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2007 பேரவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவில் 46.7 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இப்போது அதைவிட கூடுதலாக 15 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுட்டிக் காட்டின

பலத்த மழை காரணமாக காலையில் வாக்குப் பதிவு மந்தமாகத் தொடங்கியது. பாஸ்னி தொகுதியில் முதல் 2 மணி நேரத்தில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதர தொகுதிகளின் வாக்குச் சாவடிகளிலும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவாகவே இருந்தது. மழை ஓய்ந்த பின்னர் பிற்பகலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் குவிந்தனர்.

எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

862 வேட்பாளர்கள்: தேர்தல் நடைபெற்ற 55 பேரவைத் தொகுதிகளிலும் 1 கோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களின் வசதிக்காக 18,083 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. .

அதிக பதற்றம் நிறைந்த அயோத்தி பகுதி வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சில இடங்களில் வாக்குச்சாவடி வளாகத்தில் செய்தியாளர்களுக்குகூட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் நடைபெற்ற 55 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக சட்டசபையில் செல்ஃபோனுக்கு தடை - 09/02/2012


சென்னை:பாரதீய பண்பாட்டை banவாய்கிழிய பேசும் பா.ஜ.கவின் கர்நாடகா மாநில அமைச்சர்களின் ஒழுக்கச்சீரழிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் தமிழக சட்ட சபையில் மொபைல் ஃபோனுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு, புதன்கிழமை நடைபெற்ற அவைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக தொலைபேசி பேச வேண்டுமென்றால், பேரவை ‘லாபி’யில் பொதுத் தொலைபேசிகளை வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கர்நாடக சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் காரணமாக, மாநிலத்தின் பா.ஜ.க அமைச்சர்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தமிழக சட்டப் பேரவையில் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டப் பேரவை சார்பில் விதிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுக்க தனித்தனியாக குழுக்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது அவைக்குழு. அவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு என்னென்ன தேவைகள், அவற்றை எப்படி நிறைவேற்றுவது என்பன தொடர்பாக இந்தக் குழு முடிவெடுக்கும்.

இந்த நிலையில், அவைக்குழு புதன்கிழமை காலை கூடியது. தமிழக சட்டப் பேரவைக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக யாருடனாவது பேச வேண்டும் என்று நினைத்தால், லாபியில் 10-க்கும் மேற்பட்ட பொதுத் தொலைபேசிகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப் பேரவையில் ஏறக்குறைய சரிபாதி உறுப்பினர்கள் புதியவர்களாக உள்ளனர். அவர்கள் பேரவைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களையும் கூட எடுத்து வருகின்றனர். பேரவை நடைபெறும் நேரங்களில் அவை ஒலிப்பதும் உண்டு. இது குறித்து, பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவும் அறிவுறுத்தியுள்ளார்.

அவையின் மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது உதவியாளர்கள் அல்லது வாகன ஓட்டுநர்களிடம் செல்போன்களை கொடுத்து விட்டுத்தான் பேரவைக்குள் வருகிறார்கள். ஆனால், புதிய உறுப்பினர்கள் மட்டுமே அவற்றை உள்ளே எடுத்துச் செல்கின்றனர். பேரவை நடவடிக்கைகளை செல்போனில் படம் எடுத்ததாக திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, பேரவை நடவடிக்கைகளில் 10 நாள்கள் கலந்து கொள்ள முடியாதபடி ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகளும், கர்நாடகப் பேரவையில் நடந்த சம்பவங்கள் போன்றும் நடைபெறாமல் தடுப்பதற்குப் பேரவைக்குள் செல்போனுக்குத் தடை விதிக்க அவைக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் வெளியிடுவார் எனவும், அந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெட்கம்! வெட்கம்! – கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் கோஷம் - 09/02/2012


imagesCABGBQ9G

பெங்களூர்:இந்திய கலாச்சாரத்தின் தூதர்களாக தங்களை அறிமுகப்படுத்தும் சங்க்பரிவார கும்பலின் பாலியல் வக்கிரங்களின் தொடர்ச்சியாக கர்நாடகா சட்டப்பேரவையில் செல்ஃபோனில் நீலப்படம் பார்த்த விவகாரம் மாறியுள்ளது.

ஒழுக்கச் சீரழிவை சட்டசபைக்கு உள்ளேயே நிகழ்த்தி காட்டி நாட்டின் கண்ணியத்தை உலக அளவில் கேவலப்படுத்தியுள்ளனர் பா.ஜ.க அமைச்சர்கள். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடகா சட்டப்பேரவையில் பெரும் அமளி நிலவியது. எதிர்கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சட்டப் பேரவையில் செல்போனில் நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து லட்சுமண்சவதி, சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ணபாளேமர் ஆகியோர் அமைச்சர் பதவியை புதன்கிழமை காலை ராஜினாமா செய்தனர். இதனால் காலை 11 மணிக்கு தொடங்க வேண்டிய சட்டப் பேரவைக் கூட்டம் நண்பகல் 12.20 க்கு ஆரம்பித்தது.

அவை கூடியதும் முதல்வர் சதானந்தகவுடா எழுந்து ஏதோ கூற முயன்றார். அவரைப் பேசவிடாமல் தடுத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வெட்கம் வெட்கம் என்று கூக்குரலிட்டனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

பேரவைத் தலைவர் போப்பையாவின் அழைப்புக்கேற்ப முதல்வர் சதானந்த கவுடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர், ‘என் அமைச்சரவை சகாக்களான லட்சுமண்சவதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ணபாளேமர் ஆகியோர் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவற்றை ஆளுநருக்கு அனுப்பி வைத்தேன். அவர் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்’ என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் லட்சுமண்சவதி, சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ணபாளேமர் ஆகிய மூன்று பேரையும் இடைநீக்கம் செய்து, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வருவதற்காக விதி-146 மற்றும் 363-ன் கீழ் விவாதம் நடத்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டார். அவர் மேலும் பேசுகையில், ‘நாட்டில் எங்கும் நடக்காத வகையில் கர்நாடக சட்டப் பேரவையில் 3 அமைச்சர்கள் நீலப்படங்களை பார்த்துள்ளனர்’ என்றார். நீலப்படம் என்பதற்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜக உறுப்பினர் ஈஸ்வரப்பா, இதுபற்றி விசாரணை நடத்தட்டும் என்றார்.

இதனையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மஜத உறுப்பினர் ஜமீர் அகமது மற்றும் கலால்துறை அமைச்சர் ரேணுகாச்சார்யா இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இவை அனைத்தையும் அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கினார். நீலப்படம் என்று கூறியதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஆவேசமாக தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. யார் பேசுவதும் சரியாகக் கேட்கவில்லை.

இதனிடையே பேசிய சித்தராமையா, 3 பேரின் நடவடிக்கைகளை தற்காத்து கொள்கிறீர்களா? கர்நாடக சட்டப் பேரவையின் மரியாதை, கெளரவம், புனிதம் கெட்டுவிட்டது என்றார். சதானந்தகவுடா மற்றும் சித்தராமையா இடையே நேருக்குநேர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பிற்பகல் 12.40 மணிக்கு பேரவைத் தலைவர் அவையை அரைமணி நேரம் ஒத்தி வைத்தார்.

மறுபடியும், பிற்பகல் 1.50 மணிக்கு அவை கூடியதும் எழுந்த முதல்வர் சதானந்த கவுடா, எது குறித்தும் சர்ச்சை தேவையில்லை. எல்லாம் விதிப்படி நடக்க வேண்டும். கட்டாயத்துக்காக இங்கு எதையும் விவாதிக்கத் தேவையில்லை என்றார். அரசுக்கு எதிராக சித்தராமையா உள்ளிட்ட உறுப்பினர்கள் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டப்படியே இருந்தனர். இருதரப்புக்கும் இடையே வாத, பிரதிவாதம் நடந்தது. அப்போது அவையில் அமளி நிலவியதால், மாலை 3.30 மணிவரை அவையை ஒத்தி வைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

மீண்டும் மாலை 4 மணிக்கு அவை கூடியதும் சித்தராமையா எழுந்து நீலப்பட விவகாரம் பற்றி பேசத் தொடங்கினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் சதானந்த கவுடா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஆத்திரமடைந்த சித்தராமையா, முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். மேலும் பேரவைத் தலைவர் முன்பு கூடி காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா நடத்தினர். அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பேரவைத் தலைவர் போப்பையா தன்னுடைய தீர்ப்பை கூறியதோடு, இன்னும் 2 நாள்கள் மீதமிருந்த நிலையில் அவையை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.

குவைத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபலதீன ஒற்றுமைதினம்! - 08/02/2012


சோகோ அறக்கட்டளை நடத்திய மனித உரிமைக் காப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 08/02/2012